Advertisment

சிவசேனா மூத்த தலைவரை துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்.. மஹாராஷ்ட்ராவில் பரபரப்பு...

சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சேகர் ஜாதவ் விக்ரோலியில் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத ஒரு மர்மநபரால் சுடப்பட்டார். இந்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்த அவர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

shivsena leader admitted in hospital

மும்பையின் விக்ரோலி பகுதியில் இன்று காலை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சேகர் ஜாதவ் மீது திடீரென துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் சேகர் ஜாதவின் கையில் குண்டு பாய்ந்துள்ளது. இதனையடுத்து அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான். பின்னர் காயமடைந்த சேகர் ஜாதவ் சிகிச்சைக்காக கோத்ரேஜ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனையயடுத்து துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டிற்கான நோக்கம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஆளும் கட்சியை சேர்ந்த தலைவர் ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் சூட்டப்பட்டுள்ளது மஹாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Maharashtra shivsena
இதையும் படியுங்கள்
Subscribe