நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய இந்த பிரச்சனையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் தற்போது நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக மாணவர்கள் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. வட மாநிலங்களில் கலவரம் உச்சத்தில் உள்ளது. இந்நிலையில் இந்த சட்டத்தை எதிர்த்து மும்பையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொண்டார்கள். இதில் சிவசேனா கலந்துகொள்ளவில்லை.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி இதுதொடர்பாக விளக்கமளித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ஏக்நாத் இதுததொடர்பாக கூறும்போது, " தன்னார்வ அமைப்புகள் சார்பில் நடைபெற்ற இந்த அறப்போராட்டத்திற்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுவிக்கப்பட்டது. அதன்படி நாங்கள் இருவரும் கலந்து கொண்டோம். காங்கிரஸ் சார்பில் நடந்து இருந்தால் நாங்கள் கூட்டணியில் உள்ள சிவசேனா உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்து இருப்போம். இதில் எங்களுக்குள் முரண்பாடுஏதுமில்லை" என்றார்