Advertisment

ஒரு நாளைக்கு ரூ.5 கோடி; முதலிடம் பிடித்த ஷிவ் நாடார்

Shiv Nadar topped the list of highest donors in india

Advertisment

இந்தியாவில் கல்வி உள்ளிட்ட நல்ல காரியங்களுக்கு அதிக நன்கொடைகள் அளிப்பவர்கள் பட்டியலில் ஷிவ் நாடார் முதலிடம் பிடித்துள்ளார்.

இந்தியாவில் கல்வி உள்ளிட்ட நல்ல காரியங்களுக்கு அதிக நன்கொடைகள் அளிப்பவர்கள் பட்டியலை எடல் கிவ் ஹுரூன் இந்தியா என்ற பெயரில் ஹுரான் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 119 பெயர்கள் கொண்ட இந்தப் பட்டியலில் முதலிடத்தில் ஹெச்.சி.எல்லின் இணை நிறுவனர் ஷிவ் நாடார் இந்த ஆண்டு மட்டும் ரூ. 2,042 கோடி நன்கொடையாக அளித்து முதலிடம் பிடித்துள்ளார். அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.5.6 கோடி ஷிவ் நாடார் நன்கொடையாக கொடுத்துள்ளார்.

இவரைத் தொடர்ந்து விப்ரோ நிறுவனத்தின் நிறுவனர் அசீம் பிரேம்ஜி இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இவர் இந்தாண்டு மட்டும் ரூ.1,774 கோடி நிதியை நன்கொடையாக அளித்துள்ளார். ரூ. 376 கோடி நிதியளித்த முகேஷ் அம்பானி மூன்றாவது இடத்திலும், ரூ. 285 கோடி நிதியளித்து அதானி 4 இடத்திலும் உள்ளனர்.

Adani India
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe