Advertisment

பொதுவெளியில் முகத்தை மறைக்கும் ஷில்பா ஷெட்டியின் கணவர்!

Shilpa Shetty's husband hides his face in public!

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி பிரபல தொழிலதிபர் ராஜ் குந்தரா என்பவரை கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து பல்வேறு தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில், ஷில்பாவின் கணவர் ராஜ் குந்திராஆபாசப் படங்கள் தயாரித்த வழக்கில் மும்பை போலீஸார் கடந்தாண்டு கைது செய்தனர். மேலும், அவர் மீது ஐபிசி பிரிவுகள் 420 (மோசடி), 34 (பொது நோக்கம்), 292 மற்றும் 293 (ஆபாசமான மற்றும் அநாகரீகமான விளம்பரங்கள் மற்றும் காட்சிகள் வெளியிட்டது), மற்றும் ஐடி சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகள் மற்றும் பெண்களின் அநாகரீக பிரதிநிதித்துவம் (தடை) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Advertisment

பல நாட்கள் சிறையிலிருந்த ராஜ்குந்தரா அண்மையில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஒரு வருடம் கடந்த பின்னரும் பொது இடங்களில் முகம் காட்ட ராஜ்குந்த்ரா தயக்கம் காட்டுகிறார். அவரின் செயலால் அவர் மட்டுமல்லாது ஒட்டுமொத்த குடும்பமே சங்கடத்தில் உள்ள நிலையில் பொது இடங்களுக்கு வரும் ராஜ்குந்த்ரா முகத்தை முழுவதும் மறைக்கக்கூடிய பிரத்தியேக முகமூடி ஒன்றை அணிந்து கொண்டு வெளியே வருகிறார். நடிகை ஷில்பா ஷெட்டி கூட இந்த விவகாரம் காரணமாகப் பல நாட்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்த நிலையில் ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ்குந்த்ரா ஆகியோர் அண்மையில் ஒரு பார்ட்டிக்காக வெளியே வந்தபொழுது ராஜ்குந்தரா அதே முகமூடியை அணிந்திருந்தார். அங்கிருந்த பத்திரிகையாளர்கள் முகத்தைக் காட்டச் சொல்லியும் அதனைப் பொருட்படுத்தாமல் நகர்ந்தார் ராஜ் குந்த்ரா.

Advertisment

Bollywood police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe