Skip to main content

சிறுவன் மரணம்... கேரளாவை அச்சுறுத்தும் 'ஷிகல்லா' வைரஸ்!            

Published on 21/12/2020 | Edited on 21/12/2020

 

'Shikalla' virus in  Kerala!

 

2018-ல் கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தில் 'ஷிகல்லா' வைரஸ் நோய் கண்டறியப்பட்ட நிலையில், அந்த வைரஸ் நோய் மேலும் பரவாமல் அதோடு தடுக்கப்பட்டது. இந்த நிலையில், நாடு முழுவதும் பரவிக் கிடக்கும் கரோனா வைரஸ் கேரளாவையும் முழுமையாகத் தாக்கியுள்ளது. இதனால், அங்கு கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகாித்துக் கொண்டே வருகிறது. அதைத் தடுக்கும் விதமாக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

 

இந்தநிலையில் கேரளாவை கரோனாவுக்கு மத்தியில், மீண்டும் அச்சுறுத்தும் விதமாகக் கோழிக்கோடு மாவட்டத்தில் பரவியிருக்கும் 'ஷிகல்லா' வைரஸால், கோட்டம் பறம்பைச் சோ்ந்த 11 வயது சிறுவன் இறந்துள்ளார். மேலும், 45 பேரை தாக்கியுள்ளது இந்த 'ஷிகல்லா' வைரஸ். இதனால், கேரளா அரசும், சுகாதாரத்துறையும் அதிர்ச்சியடைந்துள்ளது.

 

இதுகுறித்து கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா கூறும் போது, சிறுவன் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 24 பேருக்கு வயிற்றுப்போக்கு வந்ததால் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூாி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர். அவா்களை பாிசோதனை செய்த மருத்துவ நிபுணர்கள் 24 பேரையும் ஒரே வைரஸ் அதுவும் 'ஷிகல்லா' வைரஸ்தான் தாக்கியிருக்கிறது. இறந்துபோன அந்த சிறுவனும் 'ஷிகல்லா' வைரஸ் தாக்குதலால்தான் உயிாிழந்ததாக மருத்துவ நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

 

'Shikalla' virus in  Kerala!

 

இதனைத் தொடர்ந்து கோழிக்கோடைத் தொட்டுள்ள மற்ற மாவட்டங்களில் சுகாதாரத்துறையினர் தீவிரப் பாிசோதனைகளில் ஈடுபட்டனர். ஆனால் அந்த மாவட்டங்களில் 'ஷிகல்லா' தாக்கம் இல்லை. அதேநேரத்தில் கோழிக்கோடு மாவட்டத்தில் 'ஷிகல்லா' வைரஸால், மேலும் 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டுபிடித்தனர். இவா்களுக்கு அரசு மருத்துவமனையில் தனிப் பிாிவில் வைத்து சிகிச்சையளிக்கபட்டு வருகிறது. இந்த வைரஸ் உணவு மற்றும் பாதுகாக்கப்படாத குடிநீாில் இருந்து வருகிறது. இதன் அறிகுறி வயிற்றுப் போக்கு, ரத்தம் கலந்த மலம், சளி, காய்ச்சல், வாந்தி ஆகும். இந்த அறிகுறி தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைக்குச் செல்லவேண்டும்.

 

கோழிக்கோடு காா்ப்பரேசன் பகுதியில் ஒரு சில இடங்களில் மட்டும் தான் இது கண்டறியப்பட்டுள்ளது. அங்கிருந்து உணவு மற்றும் குடிநீர் மாதிாிகள் எடுத்து பாிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இது மேலும் பரவாமல் இருக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் அச்சம் கொள்ளவேண்டாம் என்று கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்