Advertisment

காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைவராக பொறுப்பேற்ற ஷீலா தீட்சித்; சர்ச்சையை உண்டாக்கிய விருந்தினர்...

trghj

டெல்லி காங்கிரஸ் தலைவராக முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன் காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைவராக பொறுப்பில் இருந்த அஜய் மக்கான் உடல் நலம் குன்றியதால் சமீபத்தில் பதவி விலகினார். இதையடுத்து, டெல்லியின் முன்னாள் முதல்வரான ஷீலா தீட்சித் புதிய தலைவராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இன்று ராஜிவ் பவனில் நடைபெற்ற அவரது பதவியேற்பு நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான கரண் சிங், ஜனார்த்தன் திவேதி, மீரா குமார், பிசி சாக்கோ, சந்தீப் தீக்சித், அஜய் மக்கான் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் இன்று தேவேந்தர் யாதவ், ஹரூண் யூசுப் மற்றும் ராஜேஷ் லிலோத்யா ஆகிய 3 பேரும் புதிய செயல் தலைவர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர். மேலும் 1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் குற்றவாளியான ஜெகதீஷ் டைட்லரும் கலந்து கொண்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.

Advertisment

congress Delhi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe