Advertisment

காவலாளி என்று சொல்லாதீர்கள்: மோடியை கலாய்த்த பாஜக எம்.பி...

பிரதமர் மோடி ட்விட்டரில் தனது பெயரை காவலாளி நரேந்திர மோடி என கடந்த வாரத்தில் மாற்றினார். இந்த நாட்டை ஊழலில் இருந்து பாதுகாக்கும் காவலாளி என பிரதமர் மோடி அதன் பின் நடந்த கூட்டங்களிலும் பேசி வருகிறார். இந்நிலையில் மோடி தன்னை காவலாளி என அழைத்துக்கொள்வது அவருக்கே சிக்கலை உருவாக்கும் என பாஜக எம்.பி யான சத்ருகன் சின்ஹா கிண்டல் அடித்துள்ளார்.

Advertisment

shatrughan sinha

பிரதமர் மோடிக்கு ட்விட்டர் வாயிலாக தனது ஹோலி வாழ்த்தை தெரிவித்த சத்ருகன் சின்ஹா அந்த பதிவில், "பிரதமர் மோடிக்கு(சார்ஜி) எனது ஹோலி வாழ்த்துக்கள். நான் உங்களிடம் பணிவுடன் கேட்டுக்கொள்வது என்னவென்றால், 'நானும் காவலாளி' என்ற முழக்கத்தை அடிக்கடி பயன்படுத்தாதீர்கள். ஏனென்றால், எதிர்க்கட்சிகள் பேசிவரும் 'காவலாளியே திருடிவிட்டார்' என்ற கோஷத்தில் இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள இதைப் பயன்படுத்தினால், ரஃபேல் போர்விமான கொள்முதல் விவகாரத்தில் விடைதெரியாத பல கேள்விகளை இது மக்களுக்கு நினைவுபடுத்தும். அதற்கான பதில் என்ன என்பதை அறிந்து கொள்ள மக்கள் ஆர்வமாக இருப்பார்கள்.

Advertisment

எந்தவிதமான முன்அறிவிப்பும் இன்றி, திடீரென 25 லட்சம் காவலாளிகள் முன் நீங்கள் உரையாற்றினீர்கள். அதுஎப்படி எந்த கணக்கும் இன்றி 25 லட்சம் காவலாளிகள் என்று கூறினீர்கள், அது ஏன் 21 லட்சம், 22 லட்சமாக இருக்கக் கூடாதா. வறுமையில் சிக்கித்தவிக்கும் காவலாளிகளும், மக்களும் நிச்சயம் பிரதமரின் இந்த பேச்சை ரசித்திருக்கமாட்டார்கள். வறுமையின் பிடியில் இருக்கும் இந்த லட்சக்கணக்கான மக்களிடம் நீங்கள் அலங்கார பேச்சு திறனை பயன்படுத்தி பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை.

அதற்கு பதிலாக அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது, ஊதியத்தை அதிகரிப்பது, வறுமையை நீக்குவது, சிறந்த ஊதியம் கிடைக்கும் வழி ஆகியவற்றைப் பற்றி பேசி இருக்கலாம்" என சத்ருஹன் சின்ஹா தெரிவித்துள்ளார். ஒரு மூத்த பாஜக உறுப்பினரும், எம்.பி யான சத்ருகன் சின்ஹா இவாறு தெரிவித்திருப்பது பாஜக காட்சியிலேயே புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

chowkidar modi Shatrughan Sinha
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe