காங்கிரஸ் சார்பில் சத்ருகன் சின்ஹா போட்டியிடப்போகும் தொகுதி அறிவிப்பு...

பாட்னா சாஹிப் தொகுதியில் பாஜக சார்பில் எம்.பி யாக இருந்தவர் சத்ருகன் சின்ஹா. பாஜக வில் இருந்த அவர் பாஜக நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்து அக்கட்சிக்கு எதிராகவே கருத்துக்களை கூறி வந்தார். இதனையடுத்து இந்த முறை பாஜக சார்பில் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை.

shatrughan sinha to contest from patna sahib for congress in loksabha election

இதனையடுத்து அவர் பாஜக -விலிருந்து விலகி காங்கிரஸில் இணைய போவதாக அறிவித்தார். இந்நிலையில் இன்று டெல்லியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் மற்றும் சுர்ஜீவாலா முன்னிலையில் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதனை தொடர்ந்து ஏற்கனவே அவர் எம்.பி யாக இருந்த பாட்னா சாஹிப் தொகுதியிலேயே அவர் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுவார் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் சத்ருகன் சின்ஹாவை எதிர்த்து பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

congress loksabha election2019
இதையும் படியுங்கள்
Subscribe