Advertisment

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசிதரூரின் நெருங்கிய உறவினர்கள் பாஜகவில் இணைந்தனர்...!

கொச்சியில் பாஜக சார்பில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சசிதரூரின் அத்தை சோபனா சசிகுமார், அவரின் கணவர் சசிகுமார், மற்றும் அவரது குடும்ப உறவினர்கள் மொத்தம் 14 பேர் பாஜகவில் முறைப்படி இணைந்தனர். பாஜகவில் இணைந்த அனைவருக்கும், மாநில பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவர்களுக்கு பாஜக உறுப்பினர் அட்டையும் வழங்கப்பட்டது.

Advertisment

shashi tharoor

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

கடந்த இரு நாட்களுக்கு முன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் உதவியாளர் டாம் வடக்கன் பாஜகவில் இணைந்த நிலையில், நேற்று சசிதரூர் குடும்பத்தார் பாஜகவில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சசிதரூரின் உறவினர்கள் செய்தியாளர்களிடம் பேசியபோது, "நாங்கள் அனைவரும் நீண்டகாலமாகவே பாஜகவின் ஆதரவாளர்களாகதான் இருந்துவருகிறோம். ஆனால், பாஜகவில் இணைவதற்காக இப்படி ஒரு நிகழ்ச்சியை ஏன் ஏற்பாடு செய்தார்கள் எனபது தான் தெரியவில்லை” என்று தெரிவித்தனர்.

shashi tharoor
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe