ADVERTISEMENT

"காங்கிரஸ் கட்சியை இழுத்து மூடிவிடலாமா..?"... ப.சிதம்பரத்தை கடுமையாக சாடிய காங்கிரஸ் மூத்த தலைவர்...

10:26 AM Feb 13, 2020 | kirubahar@nakk…

70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தலில் 62 இடங்களை கைப்பற்றி மூன்றாவது முறையாக டெல்லி முதல்வர் இருக்கையில் அமர உள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். இந்த தேர்தலில் பாஜக 8 தொகுதிகளை கைப்பற்றியுள்ள நிலையில், காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. டெல்லியில் ஏற்பட்ட இந்த தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் டெல்லி பொறுப்பாளர் சாக்கோ நேற்று பதவி விலகினார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சிக்கு வாழ்த்து தெரிவித்திருந்த ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆம் ஆத்மி வெற்றியடைந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த டெல்லி மக்கள் பிரித்தாளும் மோசமான சித்தாந்தத்தைக் கொண்ட பாஜகவைத் தோற்கடித்துள்ளனர். 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் பல மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல்களில் மக்கள் யாரைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதைக் காட்டியதற்காக டெல்லி மக்களுக்கு மரியாதை செலுத்துகிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.

இதனை கடுமையாக விமர்சித்துள்ள பிரணாப் முகர்ஜியின் மகளும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சர்மிஷ்டா முகர்ஜி, "டெல்லி தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது. ஆனால், நீங்களோ ஆம் ஆத்மி வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள். தங்களுக்கு தகுந்த மரியாதையை உரித்தாக்கி ஒரு கேள்வியை முன்வைக்கிறேன். காங்கிரஸ் ஒருவேளை பாஜகவை தோற்கடிக்க மாநிலக் கட்சிகளை வெளிப்பணியாளர்கள் முறையில் நியமித்துள்ளதா? அப்படியில்லை என்றால் எதற்காக நம் தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் ஆம் ஆத்மியைக் கொண்டாட வேண்டும்? ஒருவேளை என் கேள்விக்கு பதில் ஆம் என்றால் நாம் ஏன் கட்சியை மூடிவிட்டுச் செல்லக்கூடாது" என தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT