Skip to main content

சரத் பவாருக்கு கொலை மிரட்டல்; மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு

Published on 10/06/2023 | Edited on 10/06/2023

 

sharad pawar issue maharashtra political circle shocked 

 

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், மகாராஷ்டிரா மற்றும் தேசிய அரசியலில் பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். மேலும் அரசியல் நிகழ்வுகள் குறித்தும் அவ்வப்போது கருத்துகளை தெரிவித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைத்தளம் மூலம் ஒருவர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

 

சரத்பவார் மகள் சுப்ரியா சுலே எம்.பி தலைமையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் நேற்று மும்பை போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் அளித்தனர். அந்த புகாரில், "தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு சமூக வலைத்தளம் மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். சமூக செயற்பாட்டாளர் மற்றும் மூடநம்பிக்கை எதிர்ப்பாளருமான நரேந்திர தபோல்கருக்கு ஏற்பட்ட அதே கதி விரைவில் சரத் பவாருக்கு ஏற்படும் என்று அந்த மிரட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளனர். மேலும் கொலை மிரட்டல் குறித்த ஆதாரங்களையும் போலீசிடம் சமர்ப்பித்தனர்.

 

இந்நிலையில் சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே தரப்பு மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பிக்கும் கொலை மிரட்டல் வந்துள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "எனக்கும் நேற்று முதல் கொலை மிரட்டல் அழைப்புகள் வந்தன. அந்த அழைப்பில் பேசியவர்கள் காலை செய்தியாளர்கள் சந்திப்பில் பேச வேண்டாம் என மிரட்டினர். இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் மற்றும் மாநில உள்துறை அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்றார்.

 

இந்நிலையில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷில்பா போட்கே கொலை மிரட்டல் ஆடியோ பதிவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவில், "சஞ்சய் ராவத் தனது செய்தியாளர்கள் சந்திப்பை நிறுத்த வேண்டும். இல்லை என்றால் அவர் சுட்டுக் கொல்லப்படுவார். ஒரு மாதத்திற்குள் சஞ்சய் ராவத் மற்றும் அவரது சகோதரர் சுனில் ராவத் இருவரையும் சுடுகாட்டுக்கு அனுப்புவேன்" என்று மர்ம நபர் கூறியுள்ளார். இந்த ஆடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஒரே நேரத்தில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த இரு முக்கியத் தலைவர்களுக்கு கொலை மிரட்டல் வந்திருப்பது மகாராஷ்டிரா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

திருட்டு நகையை வாங்கி உருக்கியதாக புகார்;  வியாபாரிகள் சங்கத்தினர் சாலை மறியல்

Published on 14/07/2024 | Edited on 14/07/2024
Complaint of buying stolen jewelry and melting it;  Traders' Association blocked the road

சிதம்பரத்தில் திருட்டு நகை வாங்கி உருக்கியதாக 3 பேரை ஈரோடு போலீஸார் சனிக்கிழமை விசாரணைக்கு அழைத்துச் சென்றதால், இதனை கண்டித்து நகை வியாபாரிகள் சங்கத்தினர் சனிக்கிழமை இரவு மேலரத வீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு பகுதியில் உள்ள நீதிபதியின் வீட்டில் 2 கிலோ தங்கம் மற்றும் ரூ 45 லட்சம் பணம் கடந்த ஒரு வாரத்தில் முன்பு திருடு போகி உள்ளது பின்னர் இது குறித்து காவல் துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் சம்பந்தப்பட்ட திருடனை கைது செய்துள்ளனர்.  கைது செய்யப்பட்ட திருடனிடம் விசாரணையில்   திருடியது ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து ஈரோடு காவல்துறையினர்  (cr. no. 181/24) குற்ற வழக்கு வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

பின்னர் நகைகளை சிதம்பரத்தில் உள்ள நகை வியாபாரிகளிடம் குறைந்த விலையில் விற்பனை செய்ததாக நகையைத் திருடியவர் ஒப்புக்கொண்டுள்ளார். அதன் பெயரில் ஈரோடு காவல்துறையினர் சனிக்கிழமை காலை முதல் சிதம்பரத்தில் நோட்டமிட்டு சிதம்பரத்தில் நகைக்கடைகள் உள்ள காசு கடைத்தெருவில் நகைக்கடை வைத்துள்ளவர்கள் மற்றும் நகையை உருக்கி தங்கக் கட்டிகளாக விற்பனை செய்பவர்களாக உள்ள , கலியமூர்த்தி மகன் சி.கே.முருகன், பாபுராவ் சேட் மகன் மோகன் பாபு, மாரியப்பன் மகன் சிவக்குமார், நகைகளை வாங்கும் புரோக்கர் ரமேஷ் ஆகிய 4 பேரை சனிக்கிழமை விசாரணைக்கு ஈரோடு அழைத்து சென்றார்கள்.  இதையடுத்து நகை வியாபாரிகள் சங்கத்தினர் தங்களிடம் தகவல் தெரிவிக்காமல் அழைத்து சென்றதை கண்டித்து நகை கடைகளை அடைத்து விட்டு சனிக்கிழமை இரவு மேலரத வீதியில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏஎஸ்பி பி.ரகுபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியதால் மறியல் வாபஸ் பெறப்பட்டு வியாபாரிகள் சங்க பிரதிநிதிகளை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். மறியல் போராட்டத்தினால் நான்கு வீதிகளிலும் சுமார் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

20 நிமிடமாக சாலையில் காத்திருந்த பொதுமக்கள் திருட்டு நகை வாங்கி வியாபாரம் செய்பவர்களுக்கு சிதம்பரம் நகை வியாபாரிகள் சங்கத்தினர் இதுபோன்று கண்மூடித்தனமாக ஆதரவு தெரிவிப்பதால் இது போன்ற திருட்டு அதிகமாக நடக்க வாய்ப்பு உள்ளது. இதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத சிதம்பரம் நகை வியாபாரிகள் திருட்டு நகையை வாங்குபவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்களே இதற்காக நாம் சாலையில் காத்துக் கிடக்கிறோமே என தலையில் அடித்துக் கொண்டனர். 

Next Story

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் பரபரப்பு; அதிகாலையில் என்கவுன்டர்?

Published on 14/07/2024 | Edited on 14/07/2024
Hype over the Armstrong case; An early morning encounter?

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 05.07.2024 அன்று இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பெரம்பூர் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் அடக்கம் செய்யப்பட்டது.

இது தொடர்பாக 11 பேர் சரணடைந்த நிலையில் 11 பேரும் கைது செய்யப்பட்டு போலீஸ் கஸ்டடி காவலில் விசாரணைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி ஆகிய 11 நபர்களும் போலீசார் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தது எப்படி என்பது தொடர்பாக 11 பேரையும் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை செய்த பொழுது இன்று காலை 5 மணி அளவில் மாதாவரம் ஏரிக்கரை பின்புறம் அருகே சென்று கொண்டிருந்த பொழுது போலீஸ் காவலில் இருந்து திருவேங்கடம் (33 வயது) தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. தப்ப முன்ற திருவேங்கடத்தை போலீசார் சுட்டதாகக் கூறப்படுகிறது. துப்பாக்கி குண்டடியுடன் தப்பிய திருவேங்கடம் தற்போது உயிருடன் உள்ளாரா அல்லது இறந்துவிட்டாரா என்பது தொடர்பாக போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் நிகழ்ந்த சம்பவம் இந்த கொலை வழக்கில் மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.