பாஜகவின் சதிகளை முறியடித்து, அதன் முகத்தில் கரியைப் பூசி மகாராஸ்டிராவில் புதிய அரசு அமைவதற்கு சரத்பவாரின் வழிகாட்டுதலே காரணம் என்று சிவசேனா புகழ்ந்திருக்கிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Uddhav Thackeray.jpg)
மகாராஸ்டிராவில் பாஜகவை வீழ்த்தி அமைந்துள்ள இந்த புதிய அரசு மாநிலத்தில் மிகப்பெரிய மகிழ்ச்சி அலையை பரப்பியுள்ளது. நாடு விடுதலை அடைந்தபோது நாடு முழுவதும் பரவிய மகிழ்ச்சிக்கும் உற்சாகத்துக்கும் ஈடாக இது இருக்கிறது என்று சிவசேனா கூறியிருக்கிறது.
சரத்பவாரைப் போன்ற வலுவான அனுபவமிக்க வழிகாட்டியின் உதவியோடு இந்த அரசு அமைந்திருக்கிறது. இந்த அரசு யாரையும் ஏமாற்றாது.
மகாராஸ்டிராவில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம், ஒரு புதிய சூரியனின் உதயத்துக்கு ஈடானது. மக்கள் மத்தியில் பரவியுள்ள மகிழ்ச்சி வெள்ளம் விடுதலையின் போது ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு ஈடானது. நாடு முழுவதும் முக்கியமான தலைவர்கள் பலர் பாஜகவின் மிரட்டலுக்கு பணிந்ததைப் போல சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பாஜகவின் மிரட்டலுக்கு பணியவில்லை. கொடுத்த வாக்குறுதியை மறுத்தவர்களுடன் கைகுலுக்க அவர் மறுத்துவிட்டார் என்று சிவசேனா பத்திரிகையான சாம்னா கூறியிருக்கிறது.
Follow Us