Advertisment

நாயிடம் சிக்கிய சிறுமியின் உடல்... அரசு மருத்துவமனையில் அவலம்...

shambal hospital dog caught on camera

அரசு மருத்துவமனை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த இறந்த சிறுமியின் உடலில் இருந்து வழிந்த ரத்தத்தை நாய் சாப்பிட்ட அவலம் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ளது.

Advertisment

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் சம்பல் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரது உடல், உடற்கூராய்விற்காக அங்குள்ள அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்துள்ளது. சிறுமியின் உடலை மருத்துவமனையில் உள்ள மாடிப்படியின் அருகே வைத்துவிட்டு ஊழியர்கள் வேறு பணிகளுக்குச் சென்றுவிட்டனர். சுமார் இரண்டு மணிநேரம் வரை கவனிப்பாரற்று கிடந்த அந்த உடலை நாய் ஒன்று கண்டுள்ளது. அந்த உடலின் அருகில் சென்ற அந்த நாய் அதிலிருந்து வழிந்திருந்த ரத்தத்தை சாப்பிட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள இறந்த சிறுமியின் தந்தை, "விபத்தில் இறந்த எனது மகளின் உடல் சுமார் இரண்டு மணி நேரம் முன்பு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டது. மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் எனது மகளின் உடல் நாய்களுக்கு உணவாகியுள்ளது" எனக் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள சூழலில், அந்த மருத்துவமனையில் பணியாற்றும் இரு ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Government Hospital uttarpradesh
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe