Skip to main content

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - ரிசர்வ் வங்கி ஆளுநர் நம்பிக்கை!

Published on 25/02/2021 | Edited on 25/02/2021

 

shaktikanta das

 

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சில மாநிலங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்தது. அஸ்ஸாம், நாகலாந்து, மேகாலயா உள்ளிட்ட சில மாநிலங்கள், பெட்ரோல் மீதான வரியைக் குறித்து பெட்ரோல் - டீசல் விலையை சிறிதளவு குறைத்துள்ளனர். இருப்பினும் இந்தியா முழுவதும் பெட்ரோல் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. பெட்ரோல், டீசல் மீதான வரியை ரத்து செய்யுமாறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.

 

இந்தநிலையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், சமீபத்தில் நடைபெற்ற நாணயக் கொள்கை குழு கூட்டத்தில், “பெட்ரோல் - டீசல் விலையைக் குறைக்க மத்திய மாநில அரசுகள், அதன் மீதான மறைமுக வரியை குறைக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து ஒருங்கிணைந்த முறையில் மாநில மற்றும் மத்திய அரசுகள் சாதகமான முடிவை எடுக்கும் என்று நம்புவதாக தற்போது தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர், "டீசல் மற்றும் பெட்ரோல் விலைகள், செலவு பக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவை பலவிதமான செயல்பாடுகளில் செலவு மிகுதி காரணியாக உள்ளன. அதிக எரிபொருள் விலைகள், உற்பத்தி செலவிலும், போக்குவரத்து செலவிலும் மற்றும் பிற அம்சங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

 

வரிகளைக் குறைக்க மத்திய, மாநில அரசுகளுக்கிடையே ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை. ஏனெனில் மறைமுக வரிகள் இருவராலும் விதிக்கப்படுகின்றன. மாநிலங்கள் மற்றும் மத்திய அரசுக்கு வருவாய் அழுத்தங்கள் இருப்பதையும், கரோனா அழுத்தத்திலிருந்து நாட்டையும், மக்களையும் வெளியே கொண்டு வர பெரிய அளவில் பணம் தேவை என்பதையும் நாம் உணர்கிறோம். ஒருங்கிணைந்த முறையில் மாநில மற்றும் மத்திய அரசு சாதகமான முடிவை எடுக்கும் என்று நான் நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாது’ - மக்களவையில் மத்திய அரசு திட்டவட்டம்

Published on 16/12/2022 | Edited on 16/12/2022

 

'Petrol diesel price cannot be reduced'- central government plan

 

பெட்ரோல், டீசல் விலை ஏறப்போவது குறித்து கடந்த டிச.12 ஆம் தேதி நமது நக்கீரன் இணையத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதில், 2017 ஆம் ஆண்டு ஜூன் முதல் பெட்ரோலிய விலை நிர்ணயத்தை பெட்ரோலிய நிறுவனங்களின் கைகளுக்கு மாற்றியதுடன் இனி தினசரி கச்சா எண்ணெய் விலையேற்ற இறக்க சூழலுக்கேற்ப பெட்ரோல் விலையிலும் ஏற்ற இறக்கங்கள் இருக்குமென்று அப்போதைய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தார். 

 

இந்த அறிவிப்பின் மூலம் பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக உயர்த்தப்படாமல் சிறிது சிறிதாகவே உயர்த்தப்படுமென்றும் கச்சா எண்ணெய் விலை குறையும்போது அதற்கேற்ப விலை குறையவும் செய்யுமென்றும் தெரிவித்தார். இதனால் நுகர்வோர்களுக்கு நல்லதொரு பயனளிப்பதாக இருக்குமென்றும் கூறினார். அப்போதைய காலகட்டத்தில் கச்சா எண்ணெய் விலை சராசரியாக பீப்பாய்க்கு 60 டாலர்கள் என்ற அளவில் இருந்தது. அதில் பெரிய மாற்றங்கள் இல்லாததால் பெட்ரோல், டீசல் விலையேற்றமும் மக்களைப் பெரிதும் பாதிக்காததாக இருந்தது. 

 

பிரதமர் மோடியின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் கச்சா எண்ணெய் விலை இதைவிடக் குறைந்தபோதும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல் உயர்த்திக்கொண்டே சென்றார்கள். அதேபோல், கொரோனா ஊரடங்கு காலத்தில் கச்சா எண்ணெய் விலை அடிமட்டத்துக்குப் போனபோதும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவில்லை. கொரோனாவுக்குப் பின்னரும்கூட கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவில்லை. இதுகுறித்து மத்திய அரசைக் கேள்வியெழுப்பும் போதெல்லாம், இதெல்லாம் எங்கள் கைகளில் இல்லை; எண்ணெய் நிறுவனங்கள்தான் முடிவெடுக்குமென்று கூறினார்கள். ஆனால், எண்ணெய் நிறுவனங்களைக் கேட்டாலோ, இதெல்லாம் பெட்ரோலிய அமைச்சகத்திடம் தான் கேட்க வேண்டுமென்று கூறின. 

 

ஆனால், இதில் உண்மை என்னவெனப் பார்த்தால், பெட்ரோலிய அமைச்சகத்துக்கே இதுகுறித்த மறைமுகப் பவர் இருப்பதாகத் தெரிகிறது. எப்படியென்றால், இந்தியாவில் எப்போதெல்லாம் மாநிலத் தேர்தல்கள் வருகின்றனவோ, அப்போதெல்லாம் பெட்ரோல், டீசல் விலை சிறிது நாட்களுக்கோ சில மாதங்களுக்கோ மாற்றமில்லாமல் அப்படியே வைத்திருக்கிறார்கள். 

 

தற்போது குஜராத், இமாச்சலப்பிரதேச தேர்தலுக்கு முன்பாகவும் ஆறு மாத காலத்துக்கு விலை மாற்றமில்லாமல் பார்த்துக் கொண்டார்கள். இதையெல்லாம் கவனிக்கும்போது இந்த விலையேற்ற இறக்கங்களில் பெட்ரோலிய அமைச்சகமே அரசுக்கு சாதகமாக விலையேற்ற, இறக்கத்தை நிர்ணயிப்பதாக அறிய  முடிகிறது. எனவே, தற்போது இரு மாநிலத் தேர்தல்களும் முடிவடைந்துள்ள நிலையில் இனி பெட்ரோல், டீசல் விலையேற்றம் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது” எனக் கூறியிருந்தோம்.

 

'Petrol diesel price cannot be reduced'- central government plan

 

இந்நிலையில், மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. முரளிதரன் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்துள்ள போதும் பெட்ரோல், டீசல் விலை மாற்றமில்லாதது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங், “2014 ஆம் ஆண்டு முதல் பெட்ரோல், டீசல் விலையேற்றம் என்பது குறைந்த அளவில்தான் உள்ளது. 1974 ஐ ஒப்பிடும்போது கடைசி எட்டு ஆண்டுகளில் விலையேற்றம் என்பது மிகக்குறைவுதான்.  பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க முடியாது. இந்தியாவில் தான் பெட்ரோல், டீசல் விலை குறைவாக இருக்கிறது” எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

 

இதைத்தொடர்ந்து, மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்குச் சாதகமாக இருப்பதாகக் கூறியும், மத்திய அமைச்சரின் இந்தப் பதிலுக்கும் எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.

 

 

Next Story

பெட்ரோல் விலை அதிரடியாக உயரப்போகும் அபாயம்!

Published on 12/12/2022 | Edited on 12/12/2022

தெ.சு. கவுதமன்

 

Risk of sudden rise in petrol price!!

 

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைப் பொறுத்தவரை முன்பெல்லாம் ஒரு சில மாதங்களுக்கு ஒருமுறை மாற்றியமைக்கக்கூடிய முறையே இருந்து வந்தது. கச்சா எண்ணெய் விலை அதிகரித்துக்கொண்டே வரும் சூழலில் தான் பெட்ரோல் டீசலின் விலை உயர்த்தப்படும். ஆனால் 2017ஆம் ஆண்டு ஜூன் முதல் பெட்ரோலிய விலை  நிர்ணயத்தை பெட்ரோலிய நிறுவனங்களின் கைகளுக்கு மாற்றியதுடன் இனி தினசரி கச்சா எண்ணெய் விலையேற்ற இறக்க சூழலுக்கேற்ப பெட்ரோல் விலையிலும் ஏற்ற இறக்கங்கள் இருக்குமென்று அப்போதைய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தார். 

 

இந்த அறிவிப்பின் மூலம் பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக உயர்த்தப்படாமல் சிறிது சிறிதாகவே உயர்த்தப்படுமென்றும் கச்சா எண்ணெய் விலை குறையும்போது அதற்கேற்ப விலை குறையவும் செய்யுமென்றும் தெரிவித்தார். இதனால் நுகர்வோர்களுக்கு நல்லதொரு பயனளிப்பதாக இருக்குமென்றும் கூறினார். அப்போதைய காலகட்டத்தில் கச்சா எண்ணெய் விலை சராசரியாக பீப்பாய்க்கு 60 டாலர்கள் என்ற அளவில் இருந்தது. அதில் பெரிய மாற்றங்கள் இல்லாததால் பெட்ரோல், டீசல் விலையேற்றமும் மக்களைப் பெரிதும் பாதிக்காததாக இருந்தது.  

 

ஆனால் பிரதமர் மோடியின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் கச்சா எண்ணெய் விலை இதைவிடக் குறைந்தபோதும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல் உயர்த்திக்கொண்டே சென்றார்கள். அதேபோல், கொரோனா லாக்டௌன் காலத்தில் கச்சா எண்ணெய் விலை அடிமட்டத்துக்குப் போனபோதும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவில்லை. கொரோனாவுக்குப் பின்னரும்கூட கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவில்லை. இதுகுறித்து மத்திய அரசைக் கேள்வியெழுப்பும் போதெல்லாம், இதெல்லாம் எங்கள் கைகளில் இல்லை; எண்ணெய் நிறுவனங்கள் தான் முடிவெடுக்குமென்று கூறினார்கள். ஆனால் எண்ணெய் நிறுவனங்களைக் கேட்டாலோ, இதெல்லாம் பெட்ரோலிய அமைச்சகத்திடம் தான் கேட்க வேண்டுமென்று கூறின. 

 

ஆனால், இதில் உண்மையென்னவெனப் பார்த்தால், பெட்ரோலிய அமைச்சகத்துக்கே இதுகுறித்த மறைமுகப் பவர் இருப்பதாகத் தெரிகிறது. எப்படியென்றால், இந்தியாவில் எப்போதெல்லாம் மாநிலத் தேர்தல்கள் வருகின்றனவோ, அப்போதெல்லாம் பெட்ரோல் டீசல் விலை சிறிது நாட்களுக்கோ சில மாதங்களுக்கோ மாற்றமில்லாமல் அப்படியே வைத்திருக்கிறார்கள். கடந்த 2019ஆம் ஆண்டில் அருணாச்சலப் பிரதேசம், ஆந்திரா, சிக்கிம் மாநிலத் தேர்தல்களுக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் விலையில் மாற்றமில்லாமல் வைத்துக்கொண்டார்கள்.  

 

2020ஆம் ஆண்டில் நவம்பர் மாதத்தில் பீகார் மாநிலத் தேர்தல் வந்தபோதும் அதற்கு முன்பாக ஒன்றரை மாத காலத்துக்கு பெட்ரோல் விலை மாறாமல் பார்த்துக்கொண்டார்கள். அதேபோல், மேற்கு வங்கத்துக்கு 2021ஆம் ஆண்டில் தேர்தல் வந்தபோது தேர்தலுக்கு முந்தைய ஒரு மாத காலத்துக்கு பெட்ரோல் விலை மாறாமல் பார்த்துக்கொண்டார்கள். கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஐந்து மாநிலத் தேர்தல் நடந்தபோது தேர்தலுக்கு முந்தைய 4 மாதங்களுக்கு விலையேறாமல் பார்த்துக்கொண்டனர். 

 

தற்போது குஜராத், இமாச்சல பிரதேச தேர்தலுக்கு முன்பாகவும் ஆறு மாத காலத்துக்கு விலை மாற்றமில்லாமல் பார்த்துக்கொண்டார்கள்.  இதையெல்லாம் கவனிக்கும்போது இந்த விலையேற்ற இறக்கங்களில் பெட்ரோலிய அமைச்சகமே அரசுக்கு சாதகமாக விலையேற்ற, இறக்கத்தை நிர்ணயிப்பதாக அறிய  முடிகிறது. எனவே, தற்போது இரு மாநிலத் தேர்தல்களும் முடிவடைந்துள்ள நிலையில் இனி பெட்ரோல், டீசல் விலையேற்றம் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. பார்க்கலாம்.