மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் முடிந்த நிலையில், 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி நாடு முழுவதும் விறுவிறுப்பாக பிரச்சார கூட்டங்கள் நடந்து வருகின்றன.

Advertisment

shakshi maharaj threaten people to vote him in loksabha election

அந்த வகையில் உன்னோ தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் சாக்‌ஷி மகராஜ் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, எனக்கு வாக்களிக்காவிட்டால், நான் உங்களுக்கு சாபம் இடுவேன் என வாக்காளர்களை மிரட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

பிரச்சாரத்தில் பேசிய அவர், "நான் ஒரு துறவி, துறவி ஒன்றை கேட்டு அது கிடைக்கவில்லையென்றால், உங்களிடம் உள்ள அனைத்து நல்லவைகளை எடுத்துக்கொண்டு பாவங்களை திருப்பி தருவார் என நமது சாஸ்திரங்கள் சொல்கின்றன. நானும் ஒரு துறவி தான். நான் உங்கள் சொத்துக்களை கேட்கவில்லை. 125 கோடி மக்களின் தலையெழுத்தை மாற்றும் வாக்குகளை தான் கேட்கிறேன்” என்று பேசினார்.

ஏற்கனவே பாஜக வின் மேனகா காந்தி இஸ்லாமிய மக்களை மிரட்டி வாக்கு கேட்டதுசர்ச்சையாகியுள்ள நிலையில் தற்போது சாக்‌ஷி மகராஜ் பேசியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">