எல்லைதாண்டி மீன் பிடித்ததாக 19 தமிழக மீனவர்கள், 6 வடமாநில மீனவர்கள் உள்ளிட்ட 25 பேரை செஷல்ஸ் நாட்டு கடற்படை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் தூத்துக்குடி மாவட்டம் தூத்தூர், பூத்துறையை சேர்ந்த மீனவர்கள் சூசை நாயகம், அந்தோணி ஆகியோரின் இரண்டு படகுகள் செஷல்ஸ் நாட்டு கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதற்கு முன்பே செஷல்ஸ் நாட்டு கடற்படையால் 5 விசைப்படகுகளுடன் 33 தமிழக மீனவர்கள், 25 வடநாட்டு மீனவர்கள் என மொத்தம் 58 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்றும் 25 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.