Advertisment

கையை இழுப்பது, இடுப்பில் கிள்ளுவது என பாலியல் தொல்லை: டைரக்டர் மீது நடிகை பரபரப்பு புகார்

Nisha Sarangh

கையை பிடித்து இழுப்பது, உடலில் கிள்ளுவது போன்ற சேட்டைகளில் டைரக்டர் ஈடுபடுவதாக பரபரப்பு புகாரை அளித்துள்ளார் பிரபல நடிகை.

Advertisment

மலையாள டெலிவி‌ஷன் நிகழ்ச்சிகளில் பிரபலமான உப்பும், மிளகும் என்ற மெகா தொடரில் நடித்து வருபவர் நிஷா சாரங். டைரக்டர் உண்ணிகிருஷ்ணன் படப்பிடிப்பில் பங்கேற்க தான் செல்லும்போது பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதாக புகார் தெரிவித்துள்ளார். தன் கையை பிடித்து இழுப்பது, உடலில் கிள்ளுவது போன்ற சேட்டைகளில் ஈடுபடுவார். பல முறை படுக்கைக்கும் அழைத்தார். நான் அவரை கண்டித்தேன்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

இது பற்றி டெலிவி‌ஷன் நிறுவன அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தேன். அவர்கள் டைரக்டரை கண்டிக்காமல் என்னை சமரசம் செய்தனர். இதை வெளியில் சொன்னால் வேறு வாய்ப்புகள் கிடைக்காமல் போகும் என்று மிரட்டினர்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

இதனால் டைரக்டர் உண்ணிகிருஷ்ணன் சேட்டைகள் மேலும் அதிகமானது. ஒரு கட்டத்தில் என்னால் இதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனவே நான் இது பற்றி வெளியில் சொல்வேன் என்று கூறினேன். அதன் பிறகு என்னை தொடரில் இருந்து நீக்கி விட்டதாக டைரக்டர் தெரிவித்தார். இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இனி இந்த தொடரில் நடிக்க மாட்டேன். டெலிவி‌ஷன் நிர்வாகம் அழைத்தாலும், உண்ணிகிருஷ்ணன் டைரக்டராக இருந்தால் தொடரில் நடிக்க வரமாட்டேன் என்று கூறிவிட்டேன் என தெரிவித்துள்ளார்.

நிஷா சாரங் பகிரங்க புகார் கூறியிருப்பது மலையாள சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

complains harassment Sexual Nisha Sarangh Actress
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe