Advertisment

17 வயது பெண்ணை ஆசை காட்டி மோசம் செய்த 80 வயது அரசியல் புள்ளி

Nelli-Sadhu-Rao

Advertisment

ஆந்திர மாநிலம், தெலுங்கு தேசம் கட்சியின் தொழிற்சங்க அமைப்பான தெலுங்கு நாடு டிரேட் யூனியன் கவுன்சில் நிர்வாக குழு உறுப்பினர் நல்லி சாதுராவ். 80 வயதான இவர் விசாகப்பட்டிணம் மாவட்டம், காஜுவாக்கா 63வது வார்டை சேர்ந்தவர்.

இவர் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களிடம் பண ஆசை காட்டி அவர்களுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் 17 வயதான மைனர் பெண்ணுக்கு பண ஆசை காட்டியதுடன், தனக்கு அரசியல் புள்ளிகளை தெரியும், அரசு உயர் அதிகாரிகளை தெரியும் அதை வைத்து வேலைவாங்கித் தருவதாகவும், அரசின் நலத்திட்டஉதவிகளை பெற்றுத் தருவதாகவும்ஆசை வார்த்தை கூறி அந்த பெண்ணை தனது ஆசைக்கு இணக்கியுள்ளார்.

இதனை அறிந்த ஒருவர், இவர்கள் தனியாக இருக்கும்போது வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இதையடுத்து பேத்தி வயதுள்ள ஒருவடன் இப்படி நடந்துகொள்ளலாமா?நல்லி சாதுராவை கைது செய்ய வேண்டும் என பல்வேறு பெண்கள் அமைப்புகள் ஆந்திர அரசை வலியுறுத்தி வருகின்றன.

இந்த வீடியோ வெளியானதையடத்து நல்லி சாதுராவ் தலைமறைவாகி உள்ளார்.

sexual harassment Absconding political leader Nelli Sadhu Rao
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe