Advertisment

பாலியல் புகார் - விசாரிக்க ராஜ்நாத் சிங் தலைமையில் குழு அமைப்பு

Rajnath-Singh

பாலியல் புகார்களை விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ராஜ்நாத் சிங் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் அமைச்சர்கள் நிதின் கட்காரி, நிர்மலா சீதாராமன், மேனகா காந்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Advertisment

பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு புகார்களை விசாரிக்க சட்ட வழிமுறைகளை வகுக்க இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. மீடூ -வில் பாலியல் தொந்தரவு குறித்து பதிவிடப்படும் நிலையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

Advertisment

சட்டங்களில் திருத்தம் தேவைப்பட்டால் இந்த குழு ஆராய்ந்து பரிந்துரை செய்யும். மேலும், தற்போதைய சட்டங்களை வலுப்படுத்துவதற்கான யோசனைகளை குழு அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

sexual complaint Rajnath singh
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe