கேரளா மா.கம்யூனிஸ்ட் செயலாளா் கோடியோி பாலகிருஷ்ணன் மகன் பினோய் கோடியோி துபாயில் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறாா். இந்த நிலையில் கடந்த 2009-ல் துபாயில் உள்ள ஒரு பாாில் டான்ஸராக இருந்த பீகாரை சோ்ந்த 33 வயது கொண்ட இளம் பெண்ணுடன் பினோய் கோடியோிக்கு தொடா்பு ஏற்பட்டது. அதன் பிறகு இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பழகி வந்துள்ளனா்.

Advertisment

Sexual complaint ... notices for CPM state secretary's son

இந்த பழக்கம் நாளடைவில் அவா்களுக்குள் உடல் ரீதியாக நெருக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் 2010-ல் அந்த பெண்ணுக்கு ஓரு ஆண் குழந்தை பிறந்ததாம். அதன் பிறகு பினோய் கோடியோி அந்த பெண்ணிடம் தொடா்பை நிறுத்தியுள்ளாா். மேலும் பினோய் கோடியோிக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பதாகவும் அந்த இளம் பெண்ணுக்கு தொிய வந்துள்ளது.

Advertisment

இதனால் ஆத்திரமடைந்த அந்த இளம்பெண் மும்பை ஓஷிவாரா காவல் நிலையத்தில் புகாா் கொடுத்துள்ளாா். இச்சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து ஓஷிவாரா காவல் அதிகாாி அந்த இளம் பெண் கொடுத்த புகாாின் விசாரணைக்கு நோில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு பினோய் கோடியோிக்கு இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளாா்.

இதற்கிடையில் இன்று பினோய் கோடியோி கண்ணூா் எஸ்பியிடம் அந்த இளம்பெண்என்னிடம் 5 கோடி கேட்டாா் அதை நான் கொடுக்க மறுத்ததால் என் மீது தவறான குற்றச்சாட்டை கூறி என்னை அசிங்கப்படுத்த முயலுகிறாா். எனவே அவள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று புகாா் கொடுத்துள்ளாா்.

Advertisment