சிறுவர்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள் அதிகரித்து வரும்நிலையில் ஒன்றாம் வகுப்பு மாணவன் ஒருவன் சக மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுப்பட முயன்றுஅந்த சிறுவன் மீது போக்ஸோ சட்டம் பாய்ந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
அரியானாவில் உள்ள ஸ்ரீஷாவில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் ஒன்றாம் வகுப்பு மாணவி ஒருவர் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது அந்த மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை உணர்ந்து இந்த அதிர்ச்சியை பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் காவல்நிலையத்தில் இது தொடர்பாக புகாரளிக்க அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் தன்னிடன் தவறாக நடந்துகொள்ள முயன்ற அந்த சிறுவனின் பெயர் தனக்கு தெரியாது எனக்கூறிய அந்த சிறுமி நேரில் அழைத்து சென்றால் அடையாளம் காட்டுவதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். சிறுமியின் உடல்நலம் தேறியபிறகு பள்ளிக்கே மாணவியை அழைத்து சென்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளபோலீசார் அந்த முகம் தெரியாத ஒன்றாம் வகுப்பு சிறுவன் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குபதிவு செய்துள்ளனர்.