கத்திமுனையில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை- கடித்து குதறி மீட்ட வளர்ப்பு நாய்!!

DOG

உத்தரபிரதேசம் மாநிலம் சாகர் மாவட்டத்தில் கரீலா என்ற கிராமத்தில் 14 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் இரவு நேரத்தில் அப்பகுதியில் உள்ள மளிகை கடைக்கு சென்றுள்ளார் அப்போது அவரது வளர்ப்பு நாயும் அவர் பின்னே சென்றது. அப்போது இருட்டு பகுதியில்ஒளிந்து கொண்டிருந்த சிலமர்ம நபர்கள் அந்த சிறுமியை கடத்திகாட்டுபகுதிக்கு கொண்டுசென்று கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றனர். தனது எஜமானரை துன்புறுத்துவதைகண்ட வளர்ப்பு நாய் அந்த கும்பலை தாறுமாறாககடித்து குதறியுள்ளது. அதனால் அந்த மர்மநபர்கள் தடுமாறினர். இதனால் அவர்களின் பிடியிலிருந்து நழுவிய சிறுமி எழுப்பிய கூச்சலில் அருகில் உள்ள மக்கள் அந்த இடத்தை அடைந்தனர்.

DOG

ஆனால் மக்கள் அந்த இடத்தை கண்டறிந்து வருவதற்குள்அந்த நபர்கள் ஓட்டம் பிடித்துதப்பிச்சென்றுவிட்டனர். அதனைத்தொடர்ந்து அந்த சிறுமிவீட்டார் கொடுத்த புகாரில்ஐசு அகிவார்(39) மற்றும் புனித் அகிவார்(24) என்ற இரண்டு நபர்களை போலீசார் கைது செய்தனர். நன்றி விசுவாசத்துடன் வளர்ப்பு நாய் தனது எஜமானரை காப்பாற்றியஇந்த சம்பவம் அங்கு பரபரப்பை கிளப்பியுள்ளது.

Child abuse Child rape dog
இதையும் படியுங்கள்
Subscribe