Advertisment

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி - புனிதம் கெட்டதாகக் கூறி மொட்டை அடிக்கப்பட்ட கொடூரம்!

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிக்கு, புனிதம் கெட்டுவிட்டதாகக் கூறி மொட்டை அடித்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சத்தீஸ்கர் மாநிலம் கவர்தா மாவட்டத்தில், கடந்த மாதம் வேலைக்குச் சென்ற சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் கூறியதை அடுத்து, சம்மந்தப்பட்ட அர்ஜூன் யாதவ் என்ற இளைஞர் பிடித்து வரப்பட்டு பஞ்சாயத்து முன் நிறுத்தப்பட்டுள்ளான்.

Advertisment

Arjun

பஞ்சாயத்துக் கூட்டத்தில் அர்ஜூன் யாதவுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் புனிதம் கெட்டுவிட்டதாகக் கூறி, மொட்டை அடிக்க உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலத்தை அடுத்து, அர்ஜூன் யாதவ் கைது செய்யப்பட்டுள்ளான். அர்ஜூன் யாதவ் அரசியல் செல்வாக்கு உள்ளவன் என்பதால், அவனுக்கு சாதகமான தீர்ப்பை பஞ்சாயத்து நடத்தியவர்கள் வழங்கியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

chattishghar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe