severe fire in the apartment in maharastra

Advertisment

மகாராஷ்டிரா மாநிலம், டோம்பிவ்லி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில், ஏராளமான குடும்பத்தினர்வசித்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று (13-01-24) காலை இந்த அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது தளத்தில் திடீரென தீ பிடித்து 18வது மாடி வரை மளமளவென தீ பரவியது.

இதில் அந்த கட்டடத்தில் வசித்து வந்த அனைவரும் உடனடியாக பாதுகாப்பாக வெளியேறினர். இதையடுத்து, இந்த பயங்கர தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தால் அதிர்ஷடவசமாக யாருக்கும் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில், மின்கசிவு காரணமாக அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்தது. இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.