Advertisment

தொடர்ந்து சரிந்த ஏழு வீடுகள்; மெட்ரோ பணிகளால் பாதிப்பு

Seven houses collapsed in succession; Affected by metro works

மெட்ரோ ரயில் பணிகளின் போது ஏற்பட்ட அதிர்வுகளின் காரணமாக குடியிருப்பு பகுதியில் உள்ள 7 வீடுகள் தொடர்ச்சியாய் இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

மும்பையில் உள்ள ஜூஹோ பகுதியில் இந்திரா நகர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள கால்வாய்கரையில் ஏராளமான குடியிருப்பு வீடுகள் அமைந்துள்ளன. இந்நிலையில் நேற்று இரவு 8.28 மணி அளவில் கால்வாய் ஓரம் அமைந்துள்ள 7 வீடுகள் அடுத்தடுத்து இடிந்து விழுந்தது.

Advertisment

விபத்தை அறிந்து முன்கூட்டியே மக்கள் வெளியேற்றப்பட்டதால் விபத்தில் யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என மும்பை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்து ஏற்பட்ட பகுதிகளில் இருந்த வீடுகளில் வசித்து வந்தவர்கள் அருகில் உள்ள சன்நியாஸ் ஆசிரமம் பிஎம்சி பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு மற்றும் நீர் போன்றவை தன்னார்வலர்களால் அளிக்கப்படிகிறது.

மெட்ரோ ரயில் பணிகளின் போது ஏற்பட்ட அதிர்வுகளின் காரணமாக வீடுகள் இடிந்து விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

house Mumbai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe