serum institue of india

Advertisment

இந்தியாவில் கடந்த மாதம் 10 ஆம் தேதி முதல்சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோயுள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் இரண்டாவது டோஸ்செலுத்திக்கொண்டு 9 மாதங்களுக்கு பிறகு பூஸ்டர் டோஸைசெலுத்திக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில்இந்தியாவில் கோவிஷீல்ட்தடுப்பூசியை தயாரித்து வரும் சீரம் நிறுவனம், இரண்டாவது டோஸ் மட்டும் பூஸ்டர் டோஸ்களுக்கானஇடைவெளியை 3 மாதங்களாக குறைக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மனசுக்மாண்டவியாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்த அனுமதிக்க வேண்டும் எனவும் சீரம் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.