A series of Incident in Jammu and Kashmir

ஜம்மு காஷ்மீரில், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, நடத்தப்பட்ட முதல் சட்டமன்றத் தேர்தலில் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதன்படி, அக்கட்சியின் செயல் தலைவராக இருக்கக்கூடிய உமர் அப்துல்லா முதல்வராக பதவி வகித்து வருகிறார்.

Advertisment

அதே சமயத்தில், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கைகளில் நாட்டின் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இருந்த போதிலும், பயங்கரவாத தாக்குதல்களால் பொதுமக்கள் கொல்லப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 18ஆம் தேதி ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், பீகாரைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் கொல்லப்பட்டார். அதே போல், கடந்த 20ஆம் தேதி கந்தர்பால் மாவட்டத்தில் கட்டுமான தளம் ஒன்றில் நடந்த பயங்கரவாத தாக்குதலில், மருத்துவர் ஒருவர் மற்றும் 6 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Advertisment

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள டிரால் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தால் புலம்பெயர்ந்த தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.காயமடைந்த தொழிலாளியான ஷுபம் குமார் (19), உத்தரப் பிரதேசத்தில் இருந்து ஜம்மு காஷ்மீரில் புலம்பெயர்ந்து வேலைகளை பார்த்து வந்துள்ளார். இந்த சமயத்தில் டிராலில் உள்ள படகுண்ட் என்ற கிராமத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், தொழிலாளி ஷுபம் குமாரின் கைகளில் குண்டு காயம் ஏற்பட்டது. உடனடியாக, அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு அவர் நலமாக உள்ளார் என்று அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த 1 வாரத்தில் மட்டும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது மூன்று முறை பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.