ஐஐடியில் சைவ உணவு சாப்பிடத் தனி இடம்; எதிர்த்த மாணவர்களுக்கு அபராதம்!

Separate space for vegetarian food at IIT mumbai

ஐஐடி வளாகத்தில் உள்ள உணவகத்தில் சைவம் சாப்பிடுபவர்களுக்குத் தனி இடம் ஒதுக்கியதைக் கண்டித்து போராட்டம் நடத்திய மாணவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மும்பை பவாய் பகுதியில் உள்ள ஐஐடி கேண்டீனில் சைவம் சாப்பிடுபவர்கள் அமர்ந்து சாப்பிடும் இடத்தில் அசைவ உணவு சாப்பிடுபவர்கள் அமர்ந்து சாப்பிடுவதாகக் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த இடத்தில் சைவம் சாப்பிடுபவர்கள் மட்டுமே அனுமதி என எழுதி போஸ்டர் ஒட்டப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் அந்த போஸ்டரை கிழித்து போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் கடந்த வாரம் ஐஐடி வளாகத்தில் செயல்படும் 12,13,14 ஆகிய மூன்று கேண்டீன்களில் 6 மேஜைகள் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு ஒதுக்கப்படுவதாக உணவு கவுன்சில் அறிவித்திருந்தது. மேலும் இதனை மீறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இதனை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து போராட்டம் நடத்திய மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அம்பேத்கர் பெரியார் புலே ஸ்டடி சர்க்கிள், மும்பை ஐஐடி நிர்வாகத்தின் உணவு கொள்கை நடவடிக்கைக்காக அமைதியான முறையில் போராடிய மாணவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. நிர்வாகத்தின் இந்தச் செயல், நவீனக் காலத்தில் தீண்டாமையை நிலைநிறுத்துவது போன்று அமைந்துள்ளது எனத் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

iit Mumbai students
இதையும் படியுங்கள்
Subscribe