Skip to main content

அடுத்த 'விக்கெட்'! - அணிமாறிய சுஷ்மிதா தேவ்.. அதிர்ச்சியில் சோனியா!

Published on 16/08/2021 | Edited on 16/08/2021

 

sushmita dev

 

காங்கிரஸ் கட்சியில், 30 ஆண்டுகளாக அங்கம் வகித்தவரும், காங்கிரஸ் மகளிர் அணித் தலைவியுமான சுஷ்மிதா தேவ், அக்கட்சியில் இருந்து விலகி திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். முன்னதாக அவர், தனது பதவி விலகல் கடிதத்தை சோனியா காந்திக்கு அனுப்பியிருந்தார். ஆனால், அந்த கடிதத்தில் பதவி விலக்கலுக்கான எந்தக் காரணத்தையும் அவர் தெரிவிக்கவில்லை.

 

இருப்பினும், கடந்த சில மாதங்களாக அவர் காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருந்தாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, அசாம் தேர்தலில் காங்கிரஸ் வைத்த கூட்டணி தொடர்பாகவும், அசாம் மாநில காங்கிரஸின் வேட்பாளர் தேர்வு தொடர்பாகவும் பெரும் அதிருப்தி அடைந்தாகவும், அப்போதே கட்சியை விட்டு வெளியேற முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் அப்போது சோனியா காந்தி கேட்டுக்கொண்டதால் அவர் கட்சியில் நீடித்து வந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

 

அசாமின் பராக் பள்ளத்தாக்கு பகுதியில் சுஷ்மிதா தேவ் மிக முக்கியமான தலைவர் ஆவர். அந்தப் பகுதி பெங்காலிகள் அதிகம் வசித்து வரும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

 

  

சார்ந்த செய்திகள்