Advertisment

செல்பியால் வந்த சண்டை!!

selife

திருமண நிகழ்ச்சியில் வரதட்சணைக்குறைவு, உணவு சரியில்லை, இரு வீட்டாருக்கும் இடையில் கருத்து வேறுபாடு, மது அருந்திவிட்டு பிரச்சனைஎன பல காரணங்களால்திருமண நிகழ்ச்சியில் பிரச்சினைகள் வந்துள்ளது. ஆனால் மணமகனுடன் நின்று யார் செல்பி எடுப்பது என்ற பிரச்சனையினால் இரு குடும்பங்களும் சண்டைபோட்டுக்கொண்டன. இது வெளிநாடுகளில் நடந்த சம்பவம்மில்லை நம் இந்தியாவில் நடந்ததுதான். உத்திரபிரதேசத்தில் உள்ள கான்பூர் மாவட்டத்தில் திருமண விழாவில் செல்பி எடுக்கும் தகராறில் மாப்பிள்ளை மற்றும் பெண் குடும்பத்தாருக்கு இடையில் சண்டை வெடித்தது. மணமகளின் குடும்பத்தார் மணமகனுடன் செல்பி எடுக்க முற்படும்பொழுது நாங்கள் முதலில் எடுப்போம் என்று கூற, மணமகள் வீட்டார் மறுக்க இரு குடும்பத்தார்கிடையில் ஒருவருக்கொருவர் சண்டை போட, மணமகனும் கோபம் அடைந்து மனைவியை அடிக்க, மணமகள் குடும்பத்தார் மணமகன் மீது தாக்குதல் செய்யத்தொடங்கினர். இரு குடும்பத்தாரும் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, இரு குடும்பத்தார் மீதும் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இவர்கள் சண்டை போட்டுக்கொண்ட வீடியோ காட்சி திருமண மண்டபத்திலிருந்த சி.சி.டிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe