Advertisment

மண்ணின் மகனுக்கே மக்கள் ஆதரவு - மம்தாவை எச்சரிக்கும் சுவேந்து அதிகாரி!

MAMATA BANERJEE

மேற்கு வங்கத்தில் வருகிறமார்ச்27ஆம் தேதி தொடங்கி எட்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன்பே பரபரப்பாக இருந்து வந்த தேர்தல் களம், தேர்தல் தேதி அறிவிப்பிற்குப் பிறகு சூடு பிடித்துள்ளது. இந்த தேர்தலில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸுக்கும், பாஜகவிற்கும் நேரடி போட்டி இருக்குமெனஎதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரு கட்சிகளைத் தவிர, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் இரண்டும் இணைந்து போட்டியிடுகின்றன.

Advertisment

இந்தநிலையில், மேற்கு வங்கமுதல்வர் மம்தாபானர்ஜி, தனது கட்சியின்வேட்பாளர் பட்டியலை நேற்று (05.03.2021) வெளியிட்டார். அப்போது அவர், தான் நந்திகிராமில் இருந்து போட்டியிடப்போவதாக அறிவித்தார்.இந்த தொகுதி சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கு மாறியமுன்னாள் அமைச்சர் சுவேந்து அதிகாரியின் தொகுதியாகும்.சுவேந்து அதிகாரி அந்த தொகுதியின் முகம் எனக்கூறப்படும் அளவிற்கு நந்திகிராமில் செல்வாக்குஉள்ளவர். ‘நந்திகிராமில் நின்று பாருங்கள்’ என பாஜக விடுத்த சவாலைஏற்று, மம்தாஅங்கு களமிறங்குகிறார்.

Advertisment

ஏற்கனவே, ‘நந்திகிராமில்மம்தாவை 50 லட்சம் வாக்குகளில் தோற்கடிப்பேன் அல்லது அரசியலை விட்டு விலகுவேன்’ என்று அறிவித்திருந்த சுவேந்துஅதிகாரி, மண்ணின் மகனுக்கே மக்கள் ஆதரவு தெரிவிப்பதாக கூறி மம்தாவிற்குசவால்விடுத்துள்ளார். இதுகுறித்து அவர், “வேட்பாளர் பட்டியலின்படி, மாண்புமிகு முதல்வர்நந்திகிராமில் இருந்து போட்டியிடுகிறார். மிகவும் நல்லது, இது வரவேற்கப்படுகிறது. ‘நாங்கள் மிட்னாபூரின் மகனை விரும்புகிறோம், வெளியாட்களை அல்ல’என்று நந்திகிராம் மக்கள் குரலெழுப்புவார்கள். நாங்கள் உங்களைப் போர்க்களத்தில் சந்திப்போம். மே 2 ஆம் தேதி, நீங்கள் தோற்று வெளியேறுவீர்கள்.” என்றார்.

Assembly election west bengal Mamata Banerjee
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe