Advertisment

கால் டாக்ஸி டிரைவர் அளித்த தகவல்; அம்பானி வீட்டில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு!

mukesh ambani house

Advertisment

இந்தியாவின் மிகப்பெரும்தொழிலதிபரானமுகேஷ் அம்பானியின் வீட்டருகே சில மாதங்களுக்கு முன்னர், வெடிபொருட்கள் நிரம்பிய கார் கண்டுபிடிக்கப்பட்டது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் பல்வேறு திருப்பங்களோடுவிசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை,மும்பை போலீஸ் அதிகாரி சச்சின் வேஸ் உள்ளிட்ட பலரைகைது செய்துள்ளது. இந்தநிலையில்இன்று மும்பை போலீஸாரை தொடர்புகொண்ட கால் டாக்சி டிரைவர்ஒருவர், பை வைத்திருந்த இரண்டு நபர்கள் முகேஷ் அம்பானியின் இல்லத்தைகேட்டதாக தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து முகேஷ் அம்பானியின் வீட்டிற்குவெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ளசிசிடிவி காட்சிகளை மும்பை போலீஸார் சோதனை செய்துள்ளனர். மேலும் துணை ஆணையர் மட்டத்திலான அதிகாரி ஒருவர் நிலைமையை கண்காணித்து வருவதாகவும் மும்பை போலீஸார்தெரிவித்துள்ளனர்.

house mukesh ambani
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe