Advertisment

சத்தீஸ்கரில் வெடிகுண்டு தாக்குதல்; பாதுகாப்பு வீரர் பலி

The security guard was lost his life for  Chattisgarh blast

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியைக் கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 7 ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று முடிந்தது. அதேபோல், மிசோரம் மாநிலத்திலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

Advertisment

அதன்படி, மத்தியப் பிரதேசத்தில் உள்ள 230 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்று (17-11-23) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதேபோல் சத்தீஸ்கரில் 70 தொகுதிகளில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசமாநிலத்தில் சுமார் 64 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 17,000 வாக்குச் சாவடிகள் பதற்றமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கூடுதலாக மத்திய துணைப் பாதுகாப்புப் படையினர் மற்றும் மத்தியப் பிரதேச போலீசார் பாதுகாப்புப் பணிக்காகக் குவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

இந்த நிலையில், சத்தீஸ்கர் மாவட்டம் கரியாபந்த்தில் நக்ஸ்லைட்டுகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கரில் நக்ஸலைட்டுகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால், அங்கு அதிகப்படியான எல்லை பாதுகாப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதில் கரியாபந்த் தொகுதியில் பாதுகாப்பு வீரர்கள் மத்தியில் தேர்தல் வாக்குப்பதிவானது நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது அங்கு திடீரென்று வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இந்தோ திபெத்திய எல்லை பிரிவைச் சேர்ந்த ஜொகிந்தர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த வெடிகுண்டு சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, சத்தீஸ்கரில் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற போது வெடிக்குண்டு தாக்குதல் நடந்ததில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

blast chattishghar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe