காந்தி குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி பாதுகாப்பை மத்திய அரசு திரும்ப பெற்ற சில நாட்களிலேயே, பிரியங்கா காந்தியின் வீட்டில் சில நபர்கள் உரிய அனுமதியின்றி புகுந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisment

security breach in priyanka gandhi home

டெல்லியில் உள்ள பிரியங்கா காந்தியின் இல்லத்தில் திடீரென அனுமதியில்லாமல் ஒரு கார் உள்ளே வந்துள்ளது. அதில் வந்திறங்கிய 5 பேர் பிரியங்கா காந்தியை சந்திக்க முற்பட்டதோடு, அவருடன் செல்ஃபீ எடுக்கவும் முயன்றுள்ளனர். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை அலுவலகத்தில் (சிஆர்பிஎஃப்) புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு மீறல் தொடர்பாக சிஆர்பிஎஃப் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெலியகியுல்லது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி மற்றும் மகள் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்ட சிறப்பு பாதுகாப்பை (எஸ்பிஜி) மத்திய அரசு சமீபத்தில் வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.