Advertisment

பிரதமர் மோடியின் தாடி ரகசியம்! 

The secret of Prime Minister Modi's beard

பிரதமர் மோடியின் முகத்துக்கு எப்போதும் அந்த வெள்ளை நிற தாடிதான் அழகு ! அந்த தாடி அவருக்கு ஒரு கம்பீரத்தைத் தரும் ! அதனை ட்ரிம் பண்ணி அழகாக வைத்திருப்பதில் அதிக கவனமாக இருப்பார் மோடி என பாஜக தலைவர்கள் சொல்வது உண்டு ! ஆனால், சமீபகாலமாக அவரது முகத்தில் நீண்டு வளர்ந்திருக்கிறது வெள்ளை நிர தாடி! ட்ரிம் பண்ணி நீளத்தை குறைக்காமல் அவர் வைத்திருப்பதைக் கண்டு தமிழக பாஜகவினர் வியப்பாக பேசிகொள்கிறார்கள்.

Advertisment

இதன் ரகசியம் குறித்து விசாரித்தபோது,’’ பிரதமருக்கு சிகை அலங்காரம் செய்ய 5 நாவிதர்கள் இருக்கின்றனர். இவர்கள் ஷிப்ட் கணக்கில் பணி புரிந்து வருகின்றனர். அண்மையில் அதில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், 5 பேரையும் பணிக்கு வராமல் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு பிரதமர் அலுவலக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisment

இதனால் கடந்த 2 வாரங்களாக அவர்கள் பணிக்கு வருவதில்லை. இந்த நிலையில், மோடியின் வெள்ளை நிற தாடி நீண்டு வளர்ந்ததால், அதுவும் அவருக்கு வேறு வித ஒரு கம்பீரத்தைத் தந்துள்ளது. இதனைப் பார்த்த பிரதமரின் செயலாளர்கள், ‘ நீண்டு வளர்ந்துள்ள தாடியில் உங்களைப் பார்க்கும் போது வங்கத்து கவிஞர் ரவீந்திரநாத் தாகூரைப் பார்ப்பது போலிருக்கிறது. இதுவும் ஒருவித அழகைத் தருகிறது ‘ என புகழ்ந்துள்ளனர். அதனால் சில நாட்களுக்கு இப்படியே இருக்கட்டுமே என மோடியும் நினைத்ததால், தாடியை ட்ரிம் செய்து நீளத்தைக் குறைப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார் மோடி! ‘’ என தாடியின் ரகசியத்தைச் சொல்கிறார்கள் தமிழக பாஜகவினர்.

India modi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe