ADVERTISEMENT

இரண்டாவது டோஸ் தடுப்பூசிகள் - பணிகள் இன்று தொடக்கம்!

10:57 AM Feb 13, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியா முழுவதும் கரோனா தடுப்பூசிகளை மக்களுக்குச் செலுத்தும் பணிகள், கடந்த 16 ஆம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்தத் தடுப்பூசி செலுத்தும் பணிகளில், சுகாதாரப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

கரோனா தடுப்பூசிகள் இரண்டு முறை செலுத்தப்பட வேண்டும். இரண்டு டோஸ்கள் செலுத்தப்பட்டால்தான் கரோனாவிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும் என மருத்துவ வல்லுநர்கள் கூறிவருகிறார்கள்.

இந்த நிலையில் கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டவர்களுக்கு, இரண்டாவது டோஸ் செலுத்தும் பணிகள் இன்று (13.02.2021) தொடங்குகிறது. இந்தியாவில் இரண்டு கரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், முதல் தடவை செலுத்தப்பட்ட தடுப்பூசியைத்தான், இரண்டாவது தடவையும் செலுத்திக்கொள்ள வேண்டும். மாற்றி செலுத்திக்கொள்ளக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT