ADVERTISEMENT

செந்நிறத்தில் மாறிய கடல்; புதுவையில் அதிர்ச்சி

05:01 PM Oct 17, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதுவையில் திடீரென கடல் நீர் செந்நிறத்திற்கு மாறியதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவா கடற்கரைக்கு அடுத்தபடியாக சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இடங்களில் புதுச்சேரி கடற்கரை இடம் பிடித்துள்ளது. தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரி கடற்கரைக்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில், இன்று புதுச்சேரி கடற்கரைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். காரணம் திடீரென பழைய வடி சாராய ஆலையின் பின்புறம் உள்ள குறிப்பிட்ட கடல் பகுதியில் உள்ள கடல் நீர் செந்நிறத்தில் காட்சியளித்தது. மற்ற பகுதியில் கடல் நீல நிறத்தில் வழக்கம் போல் காட்சியளித்த நிலையில், அந்தப் பகுதியில் மட்டும் செம்மை நிறத்தில் மாறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு செந்நிறத்தில் கடல் நீர் காணப்பட்டது. இது தொடர்பாக மீனவர்களிடம் கேட்ட பொழுது, ஆரோவில் பகுதியில் மழை பெய்ததால் செம்மண் மேட்டுப் பகுதியில் இருந்த மண் கரைந்திருக்கும். இதனால் செம்மண் நீர் நகர்ந்து கடலுக்குள் சென்றிருக்கும் எனத் தெரிவித்தனர். அந்த மண் கலந்த நீரின் அடர்த்தி அதிகம் என்பதால் கடலில் தனியாகத் தெரிகிறது. சில மணி நேரங்களுக்குப் பிறகு செம்மண் தேங்கி மீண்டும் கடல் பழைய நிலைக்கு மாறும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT