sea plane pm narendra modi in gujarat

Advertisment

இந்தியாவில் முதன் முறையாக நீர் விமான சேவையை (Sea Plane) தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.

குஜராத் மாநிலம், கெவாடியாவில் உள்ள சபர்மதி ஆற்றில் இருந்து புறப்பட்ட நீர் விமானத்தில் பயணம் செய்து அதன் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

sea plane pm narendra modi in gujarat

Advertisment

ஒற்றுமை சிலை, கெவாடியா மற்றும் சபர்மதி ஆற்று முகப்பு, அகமதாபாத் இடையே நீர் விமான சேவை துவங்கப்பட்டுள்ளது. நீர் விமான சேவையால் கெவாடியா - அகமதாபாத் இடையிலான பயண நேரம் 4 மணியில் இருந்து 45 நிமிடமாக குறையும். அதேபோல் 14 பயணிகள் வரை சுமந்து செல்லும் வகையிலான பிரிவு 2பி வகை மிதவை விமானங்கள் ஆகும். இந்த நீர் விமானம் நாளொன்றுக்கு 8 முறை இயக்கப்படும். விமானத்தில்பயணிக்க ஒரு நபருக்கு ரூபாய் 4,800 வசூலிக்கப்படும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

அகமதாபாத் மற்றும் கெவாடியா இடையேயான வான்வழி தூரம் சுமார் 200 கிலோமீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.