Schools in Pondicherry will be full time from 3rd to 1st to 12th class

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று பரவிய சூழலில், கடந்த ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி முதல் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, மூடப்பட்டது. பின்னர் கரோனா நோய்த் தொற்றின் தாக்கம் குறைந்ததையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்பட்டு, அனைத்து வகுப்புகளுக்கும் பாடம் நடத்தப்பட்டது.

Advertisment

அதேசமயம்நோய்த் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் சுழற்சி முறையில் காலை 8.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மாணவர்களுக்குவகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.இந்நிலையில் வரும் 3-ஆம் தேதி முதல் 01-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் முழுநேரம் இயக்கப்படும் என புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.