Skip to main content

200க்கு 211 மதிப்பெண்கள் பெற்ற பள்ளி மாணவி; அதிர்ச்சியில் பெற்றோர்

Published on 07/05/2024 | Edited on 07/05/2024
schoolgirl in Gujarat scored 211 out of 200 in the exam

குஜராத்தில் உள்ள ஒரு பள்ளியில் மாணவி ஒருவர் 200 மதிப்பெண்ணுக்கு 211 மதிப்பெண் பெற்றுள்ளது தொடர்பான மதிப்பெண் சான்றிதழ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

குஜராத் மாநிலம் தாஹோத் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி ஒன்றில் மனிஷாபாய் வம்சிபிள் என்ற மாணவி 4 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் அம்மாணவி பயிலும் பள்ளியில் நேற்று மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அப்போது மாணவி மனிஷாபாய் வம்சிபிள் எழுதிய  தேர்வுகளின் முடிவைப் பார்த்து அவரே ஆச்சர்யமடைந்தார். 

மாணவி மனிஷாபாய் வம்சிபிளின் மதிப்பெண் சான்றிதழில், தேர்வுகளில் அதிகபட்சமான 200 மதிப்பெண்களுக்கு குஜராத்தில்(மொழிப்பாடம்) 200க்கு 211 மதிப்பெண்களும்  கணித பாடத்தில் 200க்கு 212 மதிப்பெண்களும் பெற்றதாக குறிப்பிபட்டிருந்தது. இந்த மதிப்பெண் சான்றிதழை மாணவி தனது பெற்றோரிடம் காண்பிக்க, அதிர்ச்சியடைந்த பெற்றோர், செல்போனில் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியதோடு, பேசுபொருளாகவும் மாறியது.

இது குறித்து கல்விதுறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் மதிப்பீட்டில் சிறு தவறு நடந்துள்ளதன் காரணமாக கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாக விளக்கமளித்த பள்ளி நிர்வாகம், மாணவியின் தேர்வு முடிவுகளை மீண்டும் கணக்கிட்டு குஜராத்தி பாடத்தில் 200க்கு 191 மதிப்பெண்கள் என்றும், கணிதத்தில் 200க்கு 190 பதிப்பெண்கள் என்றும் சரியான சான்றிதழை வழங்கியது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

'நீட் முறைகேடு; யாரும் தப்ப முடியாது'- மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேட்டி

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
 'NEET Malpractice; No one can escape'- Madhya Dharmendra Pradhan interview

நடந்து முடிந்த நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் மற்றும் முறைகேடுகள் நடந்திருப்பதாக அரசியல் கட்சிகள் குற்றச்சாட்டுகளை வைத்திருக்கும் நிலையில் நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்கள் நலனே முக்கியம் அதை காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு சர்ச்சைகள் மற்றும் முறைகேடுகள் குறித்து டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசினார். அதில், ''நீட் தேர்வில் வெளிப்படைத் தன்மையின் எந்தவித சமரசமும் கிடையாது. நீட் தேர்வை பொறுத்தவரையில் இந்த விவகாரத்தில் மாணவர்கள் நலனே அரசுக்கு முக்கியம். அதைக் காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். தேசிய தேர்வு முகமையின் செயல்பாடு குறித்து ஆய்வு நடத்த உயர்மட்ட குழு அமைக்கப்படும். தேவைப்பட்டால் தேசிய தேர்வு முகமை மீது நடவடிக்கை எடுக்கப்படும். நீட் தேர்வு விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது. நீட் தேர்வு வினாத்தாள் டெலிகிராம் செயலியில் கசிந்ததாகச் சொல்லப்படும் சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் விசாரிக்கும்' என  தெரிவித்துள்ளார்.

மேலும், ''இணையதளம் மூலம் நெட் வினாத்தாள் கசிந்ததால் யுஜிசி நெட் 2024 தேர்வு ரத்து செய்யப்பட்டது. தேர்வு வினாத்தாள் கசிய விட்டது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். சிறிய தவறு கூட நேராதபடி தேர்வுகளை நடத்த உறுதி பூண்டுள்ளோம்'' எனவும் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

Next Story

குஜராத் கலவரம் பற்றிய பாடப்பகுதி திருத்தத்தால் சர்ச்சை; என்.சி.இ.ஆர்.டி இயக்குநர் விளக்கம்

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
NCERT Director Explains Why the Gujarat issue Course Removed?

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. அதன் பின்னர், பாபர் மசூதி இருந்த நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் அந்த நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதியளித்து உத்தரவிட்டது. இதனையடுத்து ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டடப்பணிகள் தொடங்கி கடந்த ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு தரிசனம் நடைபெற்று வருகிறது. 

அதே போல், கடந்த 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரத்தின் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த கரசேவகர்கள் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீ வைத்தனர்.  அதில் பற்றி எரிந்த நெருப்பில் சிக்கிக் கொண்ட பொதுமக்களும்,  கரசேவகர்களும் வெளியே வரமுடியாமல் அலறித் துடித்தார்கள். இந்த சம்பவத்தில் 14 குழந்தைகள், 27 பெண்கள் என்று மொத்தம் 59 பேர் பலியானார்கள். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு இஸ்லாமியர்கள் தான் காரணம் என்ற செய்தி குஜராத் முழுவதும் காட்டுத் தீயாக பரவியது. அப்படி அந்த செய்தி பரவியதும் குஜராத் மாநிலம் முழுவதும் ரத்தக் காடாக மாறத் தொடங்கியது. கோத்ராவில் தொடங்கி குஜராத் முழுவதும் நடந்த அந்தக் கலவரம் சுமார் மூன்று மாதம் வரை நீடித்தது. 

இந்த நிலையில், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி) தயாரித்த 12ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தக்கத்தில், குஜராத் கலவரம் பற்றியும், பாபர் மசூதி இடிப்பு பற்றிய பாடப்பகுதி நீக்கப்பட்டுள்ளது. குஜராத் கலவரம் குறித்தும், பாபர் மசூதி இடிப்பு குறித்தும் பல தகவல்கள் மாற்றப்பட்டுள்ளன. குஜராத்தில் நடந்த கலவரம் குறித்த பாடத்தில் முன்பு இஸ்லாமியர்கள் பலர் கொல்லப்பட்டனர் என்று இருந்ததை பல சமூகத்தைச் சேர்ந்த பலரும் பலியானதாக கூறப்பட்டுள்ளது. அதே போல், பாபர் மசூதி இடிப்பு குறித்தும் பல தகவல்கள் மாற்றப்பட்டுள்ளது. இத்தகைய திருத்தங்கள் கடும் சர்ச்சையாகியுள்ளது. இந்த மாற்றங்கள் மூலம் வரலாற்றை மாற்ற மத்திய அரசு முயற்சிப்பதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.  

அதே வேளையில், என்.சி.இ.ஆர்.டி இயக்குநர் தினேஷ் பிரசாத் ஒரு செய்தி நிறுவனனத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பாடத்திட்டங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “பள்ளி பாடப்புத்தகங்களில் ஏன் கலவரம் பற்றி கற்பிக்க வேண்டும்? நாங்கள் நேர்மறையான குடிமக்களை உருவாக்க விரும்புகிறோம், வன்முறை மற்றும் மனச்சோர்வடைந்த நபர்களை அல்ல. நம் மாணவர்களுக்கு அவர்கள் புண்படுத்தும் வகையில் கற்பிக்க வேண்டுமா, சமூகத்தில் வெறுப்பை உண்டாக்க வேண்டுமா அல்லது வெறுப்புக்கு ஆளாக வேண்டுமா? அதுதான் கல்வியின் நோக்கமா? 

இப்படிப்பட்ட சிறு குழந்தைகளுக்கு கலவரம் பற்றி சொல்லிக் கொடுப்போமா? அவர்கள் வளர்ந்ததும் அதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம், ஆனால் ஏன் பள்ளி பாடப்புத்தகங்கள். அவர்கள் வளரும்போது என்ன நடந்தது, ஏன் நடந்தது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்? ராமர் கோவில், பாபர் மசூதி அல்லது ராம ஜென்மபூமிக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தால், அதை நமது பாடப்புத்தகங்களில் சேர்க்கக் கூடாதா, அதில் என்ன பிரச்சனை? புதிய புதுப்பிப்புகளைச் சேர்த்துள்ளோம். புதிய நாடாளுமன்றத்தை உருவாக்கினால், பழங்கால வளர்ச்சிகள் மற்றும் சமீபத்திய முன்னேற்றங்களைச் சேர்ப்பது நமது கடமையாகும்” என்று கூறினார்.