ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு, கடந்த 10 நாட்களுக்கு முன்னர் நடைப்பெற்றது. இதில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்தப் பயிற்சி வகுப்பு இடைவேளையின்போது, ஆசிரியை ஒருவருடன், அங்கிருந்த 2 ஆசிரியர்கள் சேர்ந்து, பாம்பு போன்று நாகினி நடனமாடினர். இதனை மற்ற ஆசிரியர்கள் பார்த்து ரசித்தவாறு இருந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வந்தது.

Advertisment
Advertisment

இதனைப் பார்த்த ஜலோர் மாவட்ட கல்வி அதிகாரி, பயிற்சி வகுப்பில் நடனமாடிய பெண் ஆசிரியரை, கடந்த சில தினங்களுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் ஆசிரியை உடன் நடனமாடிய 2 ஆசிரியர்களும், புதிதாக பணியில் சேர்ந்தவர்கள் என்பதால், இதுறித்து விளக்கம் கேட்டு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.