கரோனா ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில்பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. கேரளாவில் சமீபத்தில் இரண்டு பள்ளிகளைச் சேர்ந்த192 மாணவர்களுக்கும், 72 ஆசிரியர்களுக்கும் கரோனாதொற்று உறுதியானது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், ராஜஸ்தான் மாநிலத்திலும் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியருக்கு கரோனாதொற்று உறுதியாகியுள்ளது.ஜலவார், ஜல்ராபதன் மற்றும் பவானிமண்டி அரசு பெண்கள் பள்ளியில் தலா ஒரு மாணவிக்காவது கரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.பவானிமண்டியில் உள்ள ஒரு தனியார்பள்ளியின்மாணவனுக்கும், ஜலாவர்பகுதியிலுள்ள ஒரு பள்ளியின் ஆசிரியருக்கும் கரோனாதொற்று உறுதியாகியுள்ளது.
கரோனாதொற்றால்பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், மாணவர்களுக்குக் கரோனாஉறுதியான பகுதிகளில் கரோனாபரிசோதனை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.