
தெலுங்கானா மாநிலம், மேட்சல் மாவட்டத்தில் ஸ்ரீ பிரிலியண்ட் டெக்னோ என்ற தனியார் உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி முதல்வராக ரவீந்தர் ராவ் பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்த நிலையில், இப்பள்ளியில் படிக்கும் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களின் அந்தரங்க உறுப்பைத் தொட்டு பள்ளி முதல்வர் ரவீந்தர் ராவ் பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாகப் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ, அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், மாணவர் ஒருவர் நின்று கொண்டிருக்கும் போது முதல்வர் ரவீந்தர் ராவ் அவரது அந்தரங்க உறுப்பைத் தொடுவது போது இடம்பெற்றுள்ளது. பள்ளி முதல்வர் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு, மாணவர்களும் மாணவர் சங்கங்களும் பள்ளியின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், ரவீந்தர் ராவ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த குற்றச்சாட்டுகளை பள்ளி முதல்வர் ரவீந்தர் ராவ் மறுத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, எந்தவித நடவடிக்கையும் காவல்துறை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கு பள்ளி முதல்வர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.