Advertisment

பள்ளி மாணவிகளுக்கு உள்ளாடை கட்டுப்பாடு !! சர்ச்சையை கிளப்பிய புனே பள்ளி!!

pune

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

புனேவில் பள்ளி மாணவிகளுக்கு உள்ளாடை விவகாரத்தில் கட்டுப்பாடுகளை விதித்த பள்ளி நிர்வாகம் தற்போது கட்டுப்பாடுளை வாபஸ் பெற்றுள்ளது.

புனேவின் பிரபல பள்ளியான maeer யில் மாணவிகளுக்கான வழிகாட்டு உரையில் சர்ச்சைமிகுந்த உத்தரவுகள் இருப்பதால் மாணவியர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் குழப்பம் அடைந்துவந்தனர்.

Advertisment

அதவாது மாணவியர்களின் பாதுகாப்பிற்காக வெள்ளை நிற உள்ளாடை மற்றும் தோல்நிற உள்ளாடையை அணிய வேண்டும் என்ற கட்டளையால்தான் அந்த குழப்பமே. மேலும் அதில் மாணவிகளுக்கான ஸ்கர்ட் எத்தனை மீட்டர் நீளம் இருக்க வேண்டும் என்பது முதல்கொண்டு குறிப்பிட்டுள்ளனர். இதை பள்ளி டயரியில் குறிப்பிட்டு, பெற்றோர்களின் கையெழுத்து கட்டாயமாக பெற்று வர வேண்டும். அப்படி பெறவில்லை என்றால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். பள்ளி வழிகாட்டு உரையில் குறிப்பிட்ட நேரத்தை மீறி மாணவியர்கள் ஒப்பனை அறையை பயன்படுத்தினாலும் தண்டனைகள் வழங்கப்படும் என்கின்றனர்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

இப்பள்ளி நிர்வாகத்தின் செயல் இயக்குனர் சுசித்ரா கரத் நகரே இதனை பற்றி தெரிவிக்கையில்," இதன் நோக்கம் சுத்தமானதே. இது மாணவியரின் பாதுகாப்பிற்காகவே இந்த விதிகள் எல்லாம். இந்த விதியில் ஏதேனும் பிழைகள் இருந்தால் மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் என்னை அணுகலாம், அதனை வைத்து தீர்வு கண்டுபிடிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

மாணவர்களும் மற்றும் பெற்றோர்களும் புதன்கிழமை அன்று இதனை எதிர்த்து போராட்டம் நடத்தினர். இந்த பிரச்சனை குறித்து பள்ளி இயக்குனரிடம் புகார் அளித்தனர்.

இதுகுறித்து மஹாராஷ்டிரா கல்வி அமைச்சர் வினோத் டாவடே தெரிவிக்கையில்," இந்த பிரச்சனையை பற்றி விசாரணை நடத்த கல்வித்துறைக்கு தெரிவித்துள்ளேன். தேவைப்பட்டால் அவர்களின் மீது நடவடிக்கையும் எடுக்கப்படும்" என்று கூறியிருந்தார் இந்த நிலையில் தற்போது பள்ளியின் இந்த சர்ச்சையை கிளம்பியகட்டுப்பாடு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக கூறட்டுள்ளது.

order schools Pune
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe