assam

அஸ்ஸாம் மாநிலம், பிஸ்வந்த் மாவட்டத்தில் உள்ள நதுவார் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளிக்கு செல்ல ஆற்றை கடந்துதான் செல்ல வேண்டும் என்கிற சூழ்நிலை இருக்கிறது. ஆனால், அந்த ஆற்றை கடக்க பாலம்தான் இல்லை. இதனால் இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மிகுந்த சிரம்த்திற்கு ஆளாகிவருகின்றனர். இந்த ஆற்றை கடக்க சில மாணவர்கள் ஆபத்தான முறையை கையாண்டு வருகின்றனர். அலுமினிய பாத்திரங்களை வைத்து ஆற்றை கடக்கின்றனர்.

Advertisment

இதுகுறித்து அதிகாரிகள் பேசுகையில், ஆற்றை கடந்து செல்ல உடனடியாக படகு வழங்கப்படும். மேலும், பள்ளியை வேறு இடத்துக்கு மாற்ற மாவாட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தப்படும் என்கின்றனர்.

Advertisment