Advertisment

ஃபீஸ் கட்டாத மாணவர்களை சாலையில் அமரவைத்த பள்ளி நிர்வாகம்; வைரலாகும் வீடியோ

The school administration made the students who did not pay fees sit on the road; A viral video

Advertisment

50க்கும் மேற்பட்ட மாணவர்களை பள்ளி வாயிலுக்கு வெளியே சாலையில் அமர வைக்கப்பட்டிருக்கும் வீடியோ ஒன்றுவெளியானதை அடுத்து, கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. விசாரணையில் கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களை பள்ளி நிர்வாகம் இவ்வாறு கொடுமைப்படுத்தியது தெரியவந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் சித்தார்த் நகரில் உள்ள ஷியாம் ராஜி உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் ஒரு குழுவாக மண் சாலையில் அமர வைக்கப்பட்டிருந்தனர். பள்ளியின் முதல்வர் ஷைலேஷ் குமார் திரிபாதி, கட்டணம் செலுத்தாததற்காக கண்டிக்கும் வகையில் மாணவர்களை பள்ளிக்கு வெளியே உள்ள சாலையில் அமரவைத்தது தெரியவந்தது.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி, பொதுமக்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. பள்ளிகளின் மாவட்ட ஆய்வாளர் இந்தச் சம்பவத்தை 'வெட்கக்கேடானது' எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

ஒரு மாணவருக்கு ₹10,000 முதல் லட்சங்கள் வரை கட்டணம் நிலுவையில் இருந்தது. வங்கியின் அழுத்தம் மற்றும் செலுத்தப்படாத நிலுவைத் தொகையால் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக தனக்கு வேறு வழியில்லாமல் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள நேரிட்டதாக பள்ளியின் முதல்வர் சைலேஷ் குமார் திரிபாதி கூறியுள்ளார். அதேநேரம் தன்னுடைய செயலுக்கு மன்னிப்பும் கேட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

uttarpradesh
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe