தமிழகத்தில் ஏழை மக்களுக்கு உதவும் வகையில் செயல்பட்டுவந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தை முன்மாதிரியாக கொண்டு கடந்த ஆண்டு ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டம் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டது.

Advertisment

scam in ayushman bharat scheme

இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள ஏழை மக்கள் தங்களது மருத்துவ செலவுகளை இந்த காப்பீட்டு திட்டம் மூலம் செலுத்த முடியும். மக்களின் நலனுக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்தை பயன்படுத்தி நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக தற்போத தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் இது தொடர்பான ஊழல் அதிக அளவில் நடந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்ததாகவும், டயாலிசிஸ் செய்யும் வசதியும், கிட்னி சிறப்பு மருத்துவரும் இல்லாத மருத்துவமனையில் டயாலிஸிஸ் செய்தாகவும் கூறி பல்வேறு காரணங்களை காட்டி மருத்துவமனைகள் ஊழலில் ஈடுபட்டுள்ளன. மேலும் சாதாரண சளி பிரச்சனைக்கு வந்தவர்களுக்கு கூட கொடிய நோய் இருப்பதாக அரசிடம் கணக்கு காட்டி அதற்கான சிகிச்சை செலவு என கூறி கோடிக்கணக்கில் பணம் ஊழல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்த நோயாளி ஒருவருக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தேசிய நல ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரிகள், அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நோயாளிக்கு அறுவை சிகிச்சை தேவைதானா என்பதை உறுதி செய்ய திடீரென தங்கள் குழுவுடன் ஆய்வில் ஈடுபட்டனர்.

அப்போது சிகிச்சை அளிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்த அந்த நோயாளி ஸ்கூட்டியில் சுற்றிக்கொண்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதன்பின் நடந்த ஒருசில ஆய்வுகளிலும் முன்னுக்கு பின் முரணான சம்பவங்கள் நடந்துள்ளது. இதனையடுத்து இது குறித்து விசாரிக்க தொடங்கிய போதே பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதற்கான சாத்தியகூறுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.