Skip to main content

“அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கு ரத்து” - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 29/11/2023 | Edited on 29/11/2023

 

SC verdict for Cancellation of the case registered by the ed

 

கர்நாடகத்தைச் சேர்ந்த அலையன்ஸ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மதுகர் ஆங்குர் என்பவர் பல்கலைக்கழக சொத்துகளை முறைகேடாக விற்று ஆதாயம் அடைந்ததாக அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்திருந்தது. மேலும் மதுகர் ஆங்குர் முறைகேட்டில் ஈடுபட உடந்தையாக இருந்ததாக பல்கலைக்கழகத்தின் மற்றொரு முன்னாள் துணை வேந்தரான பாவனா திப்பூர் என்பவர் மீதும் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்திருந்தது. அதுமட்டுமின்றி மதுகர் ஆங்குர் பணப்பரிவர்த்தனை செய்வதற்குத் தன் கணக்கை பயன்படுத்த பாவனா திப்பூர் அனுமதித்ததாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டி இருந்தது.

 

அதனைத் தொடர்ந்து பி.எம்.எல்.ஏ. சட்ட வரம்புக்குள் வராத குற்றம் தொடர்பாகத் தன் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது தவறு எனக் கூறி பாவனா திப்பூர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து பாவனா திப்பூர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

 

இந்நிலையில் இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் அபய் எஸ். ஓகா, பங்கஜ் மிட்டல் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “சட்ட விரோத பணப்பரிமாற்ற சட்ட வரம்பில் வராத குற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு தொடர முடியாது. பி.எம்.எல்.ஏ. சட்ட வரம்புக்குள் வரும் குற்றச்செயல் மூலமாக முறைகேடாக பணப்பரிமாற்றம் நடந்திருந்தால்தான் அமலாக்கத்துறை வழக்கு தொடர முடியும்” எனக் கூறி அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ஐபிசி 120 பி என்ற சட்டப் பிரிவின் கீழ் ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்து கோவில்களுக்கு 10% வரி; எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.க.வினர்

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
The BJP protested for 10% tax on temples in karnataka

கர்நாடகா மாநிலத்தின் சட்டசபைக் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் சித்தராமையா 2024-2025 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை கடந்த 16ஆம் தேதி கர்நாடகா சட்டசபையில் தாக்கல் செய்தார். அதில், பேசிய முதல்வர் சித்தராமையா, “தேவையான அனுமதிகளைப் பெற்று விரைவில் மேகதாது அணை கட்டப்படும். அங்கு அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன” என்று பேசியிருந்தார். இது தற்போது விவாதப் பொருளாக மாறி வருகிறது. 

அதனைத் தொடர்ந்து, சிகரெட் விற்பனைக்கு கட்டுப்பாடு விதித்து கர்நாடக சட்டப்பேரவையில், அது தொடர்பான சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், கர்நாடக சட்டசபையில் ‘கர்நாடகா இந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலைய அறக்கட்டளை மசோதா 2024’ நேற்று முன் தினம் (21-02-24) நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்திருத்தத்தின்படி, கோவிலின் மொத்த ஆண்டு வருமானம் ரூ.1 கோடிக்கும் அதிகமாக இருந்தால், அந்த கோவில்கள் 10% வரி செலுத்த வேண்டும். ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வருமானம் உள்ள கோவில்கள் 5% வரி செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு, கர்நாடகா பா.ஜ.க மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இது குறித்து கர்நாடக மாநில பா.ஜ.க தலைவர் விஜயேந்திர எடியூரப்பா தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது, “ஆளும் காங்கிரஸ் அரசு இந்து விரோதக் கொள்கைகளைக் கடைபிடித்து, தற்போது இந்து கோவில்களின் வருவாயை குறிவைத்துள்ளது.

கோவில் வளர்ச்சிக்கு பக்தர்கள் அர்ப்பணிக்கும் காணிக்கையை, கோவில் திருப்பணிக்கு ஒதுக்க வேண்டும் என்று பக்தர்கள் எதிர்பார்க்கிறார்கள். கோவில்களில் இருந்து கிடைக்கும் வருமானத்தை வேறு பணிகளுக்கு பயன்படுத்த காங்கிரஸ் அரசு திட்டமிடுகிறது. அப்படி வரி வசூல் செய்வதாக இருந்தால் அனைத்து மத நிறுவனங்களில் இருந்தும் வசூலிக்கலாம். ஏன் இந்து கோவில்களில் இருந்து மட்டும் வசூலிக்க வேண்டும்” என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தார். 

Next Story

மீண்டும் ஜாமீன் கேட்ட அங்கித் திவாரி; கைவிரித்த மதுரை கிளை

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
 Ankit Tiwari denied bail

லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிக்கு ஜாமீன் வழங்க மதுரை உயர்நீதிமன்ற கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துணை சூப்பிரண்டாக இருக்கக்கூடிய டாக்டர் சுரேஷ்பாபுவின் சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்காமல் இருக்க ரூ. 20 லட்சம் லஞ்சம் பெற முயன்றபோது, கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார். அதன்பின் திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு மதுரை மத்திய சிறைக்கு மாற்றினார்கள்.

இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்ட அங்கித் திவாரி இரண்டாவது முறையாக தனக்கு ஜாமீன் வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் பொழுது அங்கித் திவாரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மனுதாரர் கிட்டத்தட்ட 80 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கிறார். உடனடியாக அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டது. ஆனால் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உச்சநீதிமன்றம் இந்த வழக்கிற்கு இடைக்கால தடை மட்டுமே விதித்துள்ளது.

வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வரும் மார்ச் 11ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர இருக்கிறது.  திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிக்கை தயார் செய்து வைத்துள்ளது. எனவே உச்ச நீதிமன்ற தீர்ப்பை பொறுத்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். அதுவரை அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. ஜாமீன் வழங்கினால் சாட்சியங்களை கலைக்க வாய்ப்புள்ளது என கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்ற கிளை மார்ச் 12 ஆம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்திவைத்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பை பொறுத்து தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.