/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/thoo-in.jpg)
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் கடந்த மே 22 ஆம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கை சிபிஐ க்கு மாற்றி கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் வழக்கை தமிழக அரசே தொடர்ந்து விசாரிக்கவும், தூப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டதற்கும் தடை விதிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது. ஆனால் கடந்தமுறை விசாரணையின்போது, சிபிஐ விசாரணைக்குத் தடை விதிக்க மறுத்ததோடு, இந்த மனு மீது சிபிஐ உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு விசாரணையை வேறு தேதிக்கு ஒத்திவைக்க எதிர்மனுதாரர்கள் தரப்பில் கோரப்பட்டது , அதனை ஏற்று 2 வார கால அவகாசம் வழங்கி நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)