சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்ஜிப் பானர்ஜி, கடந்தாண்டு மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். மேலும்அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
இதனைத்தொடர்ந்துமுனீஸ்வர் நாத் பண்டாரி, கடந்தாண்டு நவம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்றுக்கொண்டார். இந்தநிலையில் உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம்,முனீஸ்வர் நாத் பண்டாரியை சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க குடியரசு தலைவருக்குப் பரிந்துரை செய்துள்ளது.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்,கொலிஜியத்தின் பரிந்துரைக்குஒப்புதல் அளித்ததும்,முனீஸ்வர் நாத் பண்டாரி சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றுக்கொள்வார்.